Advertisment

திருமணத்திற்கு அடுத்த நாளே வீடியோ ரிலீஸ்: விஜயகுமார் பேத்தி தியா- புது மாப்பிள்ளை கியூட் டான்ஸ்

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில் அடுத்த நாளே வீடியோ ரிலீஸ் செய்துள்ளார்கள். விஜயகுமார் பேத்தி தியா - புது மாப்பிள்ளை இருவரும் கியூட்டான டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
vijayakumar grand daughter diya wed

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா திருமணம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில் அடுத்த நாளே வீடியோ ரிலீஸ் செய்துள்ளார்கள். வீடியோவில், விஜயகுமார் பேத்தி தியா - புது மாப்பிள்ளை இருவரும் கியூட்டான டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். 

Advertisment

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். ஆரம்பத்தில், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய விஜயகுமார், பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமா என 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள். முதலில் 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை 1976-ல் திருமணம் செய்துகொண்டார். இதில், விஜயகுமார் முதல் மனைவியான முத்துகண்ணுவிற்கும் பிறந்த பிள்ளைகள், கவிதா விஜயகுஆர், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் அருண் விஜய் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

Anitha Vijayakumar Family

அதே போல, விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர் ஆவார். 

விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான அனிதா விஜயகுமார் ஒரு டாக்டர். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டு கத்தார் நாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அனிதா விஜயகுமாரின் மகள் தியாவும் ஒரு டாக்டர். 

இந்நிலையில், அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கும் திலன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து,  அனிதா விஜயகுமார் மகள் தியாவுக்கும் திலனுக்கும் பிப்ரவரி 19-ம் தேதி சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜயகுமாரின் மகள்கள் கவிதா, ப்ரீத்தா, மகன் அருண் விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு, ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

திருமணம் முடிந்த மறுநாளே வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். திருமணத்தில் மணப்பெண் தியாவை, தாய் மாமன் நடிகர் அருண் விஜய் கையைப் பிடித்து அழைத்து வருகிறார்.

விஜயகுமாரின் பேத்தியான மணமகள் தியா  மற்றும் புது மாப்பிள்ளை திலன் திருமண நிகழ்வில் கியூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஜயகுமார் பேத்தி தியா - புதுமாப்பிள்ளை திலன் ஜோடியின் கியூட்டான டான்ஸைப் பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment