திரைப்பட நடிகர் மீசை ராஜேந்திரன் தன்னுடைய திரைப் பயணங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். இதில் தன்னுடன் பணியாற்றி நடிகர்கள் குறித்தும் தகவல் பகிர்ந்து கொண்டார்.
Advertisment
தமிழ் சினிமாவில் காமெடி, வில்லன் உள்ளிட்ட காட்சிகளில் துணைவேடங்களில் நடித்தவர் மீசை ராஜேந்திரன். விஜய், வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில், நடிகர் மீசை ராஜேந்திரன் Take 1 என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் விஜயகாந்த், விஜய், வடிவேலு, விவேக், உதயநிதி பற்றி பேசியுள்ளார்.
தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், "வடிவேலு சார் உடன் நான் நடித்துள்ளேன். வடிவேலுவின் பாடி லேங்வேஜ், நடிப்பை அப்போது மக்கள் ரசித்தார்கள். இப்போது ரசிப்பார்களா எனத் தெரியிவில்லை என்றார். அதோடு என்னைப் பொறுத்தவரை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். விஜய் சார் இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.
விஜயகாந்த் குறித்து பேசுகையில், "சினிமா, அரசியலில் ஒரு நிமிடத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கேப்டன் ஒரு முறை ஆட்சி செய்திருந்தால் அவரை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி இருக்க முடியாது. சினிமாவில் இருந்தபோதே மக்களுக்கு நிறைய செய்தவர். மக்கள் பிரச்சனைக்கு முன் நிற்பவர். விஜய், விஜயகாந்த்யையும் ஒப்பிடவே முடியாது" என்றும் கூறினார்.
தொடர்ந்து, தொகுப்பாளரின் கேள்வி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய மீசை ராஜேந்திரன், "விஜயகாந்த் மீது அவர் நிறைய அன்பு கொண்டவர். விஜயகாந்த் உதயநிதிக்கு உதவிகள் செய்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உதயநிதியின் ஸ்னோ பவுலிங் (Snow Bowling) விளையாட்டு கிளப் இருந்த போது அதில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு விஜயகாந்த் உதவினார். அப்போது அந்த பிரச்சனையை விஜயகாந்த் தீர்த்து வைத்தார்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“