Vijay’s Beast movie records collection pre release: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, லில்லிபுட் ஃபாருக்கி மற்றும் அங்கூர் அஜித் விகல் ஆகியோர் நடித்துள்ளனர். இதை UFO Moviez இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வட இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.
இந்த நிலையில் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சுவாரஸ்யமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், படம் வெளியாவதற்கு முன்பே, 2022-ல் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: Vijay-Nelson Interview: இன்று தளபதி… நாளை தலைவன்? நடிகர் விஜய் செம ‘பஞ்ச்’ பேட்டி
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, வெளியீட்டிற்கு முன்னதாக, விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 2022 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியுள்ளது, இது முன்கூட்டியே முன்பதிவு செய்ததன் மூலம் நிகழ்ந்துள்ளது.
"#Beast Australia A$300K முன் விற்பனை மற்றும், விஜய்யின் ஒரு நாள் அதிக வசூல் மற்றும் ரிலீஸூக்கு முன்பே 2022 இன் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம்" என்று ரமேஷ் பாலா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், திரைப்பட விநியோகஸ்தர் அஹிம்சா என்டர்டெயின்மென்ட்டின் ட்வீட், அமெரிக்காவில் பீஸ்ட் படத்தின் பிரீமியர் ஷோக்களுக்கான முன்பதிவு எவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது என்ற விவரங்களை வெளியிட்டது.
"#பீஸ்ட் அமெரிக்கா:
- #ThalapathyVijay-க்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய ரிலீஸ்
- ரசிகர்களுக்கான பிரமாண்ட பிரீமியர் ஷோக்கள்
- தமிழ்: 360 இடங்கள், தெலுங்கு: 186 இடங்கள்
- #விஜய்க்கு அதிக பிரீமியர் வசூல்" என்று ட்வீட் செய்துள்ளார்.
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவும் தனது ட்வீட் ஒன்றில், பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியன்று பிரம்மாண்டமான திருவிழாவிற்கு தயாராகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil