scorecardresearch

விஜய் வாய்ஸில் மற்றொரு பாசிட்டிவ் பாடல்; பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு

வெளியானது பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல்; தளபதி வாய்ஸூம் டான்ஸூம் வேற லெவல் என ரசிகர்கள் வரவேற்பு

விஜய் வாய்ஸில் மற்றொரு பாசிட்டிவ் பாடல்; பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு

Vijay’s Beast second song Jolly O Gymkhana released: பீஸ்ட் படத்தில் விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் நடித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலாக அரபிக்குத்து பாடல் வெளியாகி யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்தநிலையில், இன்று இரண்டாவது பாடலாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த பாடல் வெளியாகும் நாள் குறித்த அறிவிப்பில், விஜய் பாடியுள்ளதாக வெளியானதால், பாடலுக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. பொதுவாக விஜய் படத்தின் பாடல் வெளியாகும்போதே பெரிய வரவேற்பு கொடுக்கும் விஜய் ரசிகர்கள், இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளதால், அவரது வாய்ஸை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இன்று 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியாக சற்று தாமதமானதால் விஜய் ரசிகர்கள் ஏக்கமடைந்திருந்த நிலையில், சற்று தாமதமாக பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: மனைவி பிரேமலதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்.. போட்டோ வைரல்!

ஜாலியோ ஜிம்கானா பாடல் தாமதமாக வெளியானாலும், அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. இந்த பாடலை கு.கார்த்திக் எழுதியுள்ளார். ரெண்டுல ஒண்ணு பார்க்கலாம் என தொடங்கும் இந்தப் பாடல் வெளியான 15 நிமிடங்களிலே 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி போல், தளபதியிடமிருந்து மற்றுமொரு பாசிட்டிவான பாடல் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளதார்.

பாடலுக்கு நடிகர் விஜய்யின் வித்தியாசமான நடனத்தையும் ரசிகர்கள் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், தளபதியின் வாய்ஸூம் டான்ஸூம் செம மாஸ் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijays beast second song jolly o gymkhana released