பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்: அஜித்தின் விஸ்வாசம் சாதனையை முறியடித்த விஜய்யின் பிகில்!

தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வெளியான விஜய் நடித்த பிகில் படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. பிகில் படம் கடந்த 4 வாரங்களில் தமிழகத்தில் மட்டும் 142.75 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

By: November 21, 2019, 3:04:28 PM

தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வெளியான விஜய் நடித்த பிகில் படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் விஜய் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. பிகில் படம் ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாக ஒரு கலவையான விமர்சனைத்தைப் பெற்றது.

விஜய்யின் பிகில் படம் வெளியாகி ஒரு மாதம் நெருங்க உள்ள நிலையில், இந்தப் படம் வசூலில் உலக உளவில் ரூ.300 கோடியை எட்டும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பிகில் படம் கடந்த 4 வாரங்களில் தமிழகத்தில் மட்டும் 142.75 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு வெளியான நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் தமிழகத்தில் ரூ.140 கோடி வசூலித்திருந்தது. இதன் மூலம், விஜய்யின் பிகில் படம் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

கேரளாவில் பிகில் படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.19.65 கோடி வசூலித்து இதற்கு முந்தைய விக்ரம் நடித்த ஐ படத்தி அதிக சாதனையை முறியடித்துள்ளது. சினிமா வர்த்தக ஆய்வாளர்களின் கருத்துப்படி, பிகில் படம் விரைவில் உலக அளவில் வசூலில் ரூ.300 கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

விஜய் நடித்த தெறி, பைரவா, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியான பிகில் படம் தொடர்ச்சியாக ரூ.100 கோடியை வசூலிக்கும் அவருடைய 5 படமாக உள்ளது. இதுவரை விஜய் நடித்து 7 படங்கள் ரூ.100 கோடியை வசூலித்துள்ளன.

பிகில் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது. இதில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், இந்துஜா, ரெபா மோனிகா ஜான், அமிர்தா அய்யர், வர்ஷா, கதிர், விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்காலிகமாக தளபதி 64 படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இது ஒரு கேஸ்டர் படம் என்றும் இதில் விஜய் முதல்முறையாக கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijays bigil movie record break ajiths viswasam in box office collection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X