தேர்வில் விஜய்யின் ‘வெறித்தனம்’ பாடலை எழுதிய மாணவர்; டுவிட்டரில் பரவிய விடைத்தாள்

A Student wrote bigil movie song in exam: மாணவர் ஒருவர் தேர்வில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலை எழுதியிருப்பது டுவிட்டரில் பரவியுள்ளது.

bigil, kaithi release live updates
தளபதி விஜய்

A Student wrote bigil movie song in answer sheet: மாணவர் ஒருவர் தேர்வில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலை எழுதியிருப்பது டுவிட்டரில் பரவியுள்ளது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் பலருக்கும் ஒரு அனுபவம் நிச்சயமாக இருக்கும். அது புத்தகத்தில் படிக்காத பகுதிகளில் இருந்து தேர்வில் கேள்வி கேட்கப்பட்டால் என்ன எழுதுவது என்று தெரியாமால் நம்முடைய சொந்தக் கதை, சோகக் கதையை எல்லாம் எழுதி வைத்திருப்போம். சிலர் கவிதை எழுதி வைத்திருப்பார்கள். சிலர் சினிமா பாடல்களை எழுதி வைத்திருப்பார்கள். ஆனால், அவை எல்லாம் அன்று யாருக்கும் தெரியாமல் வகுப்பறையோடு முடிந்துவிடும் அல்லது அந்த குறிப்பிட்ட பள்ளிக் கல்லூரியோடு முடிந்துவிடும்.

சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் அப்படி எழுதப்பட்ட ஒரு தேர்வு விடைத்தாள் டுவிட்டரில் பரவியுள்ளது.

மாணவர் ஒருவர் தேர்வு விடைத்தாளில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலை எழுதியுள்ளார். அந்த விடைத்தாளை தென்னரசு என்பவர் டுவிட்டரில் பதிவிட வெறித்தனம் பாடலை எழுதிய பாடாலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் அதைப் பகிர்ந்துள்ளார்.

தேர்வில் விடைத்தாளில் பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலை எழுதிய அந்த மாணவர் யார்? எந்த பள்ளியில் என்ன வகுப்பில் படிக்கிறார் என்ற விவரங்கள் எதுவும் குறிபிடவில்லை.

விடைத்தாளை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டில் தானும் இது போல ஒருமுறை எழுதியதாகவும் வரலாறு நம்மல மன்னிக்கவே மன்னிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் டுவிட்டரி பகிர்ந்து கம்மெண்ட் செய்துள்ளனர்.

ஆனாலும், மாணவர்கள் இப்படி தேர்வில் சினிமா பாடலை எழுதுவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வெறித்தனம் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijays bigil movie verithanam song lyrics wrote in answer sheet by a student

Next Story
விஜய் டிவில இருந்து இன்னொரு ஹீரோ ரெடி! கோபிநாத்தை ‘டிக்’ செய்த கேப்டன் இயக்குநர்!Neeya Naana Gobinath
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express