Leo Box Office Collection Day 10: விஜய்யின் லியோ திரைப்படம் வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவைச் சந்தித்தாலும் மீண்டும் உயர்ந்து உலக அளவில் ரூ. 500 கோடியை வசூல் செய்துள்ளது.
ஆங்கிலத்தி படிக்க: Leo box office collection Day 10: Vijay’s film bounces back, crosses Rs 500 crore mark worldwide
விஜய்யின் லியோ திரைப்படம் வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மந்தமாக இருந்த நிலையில், அதற்குப் பிறகு, இரண்டாவது வார இறுதியில் வசூலில் மீண்டும் எழுச்சி பெற் சனிக்கிழமை ரூ. 14 கோடி வசூலித்தது.
'தளபதி' விஜய்யின் லியோ திரைப்படம் வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஒரு சிறிய சரிவை சந்தித்த நிலையில், படம் ரிலீசாகி இரண்டாவது வார இறுதியில் சனிக்கிழமை மீண்டும் வசூலில் ஏறுமுகம் கண்டது. சினிமா இண்டஸ்ட்ரி டிராக்கர் சச்னில்க்கின் கருத்துப்படி, லியோ திரைப்படம் சனிக்கிழமை 14 கோடி ரூபாய் வசூலித்தது. இதன் மூலம், இந்தியாவில் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் 284.90 கோடியாக உயர்ந்தது. அதுமட்டுமில்லாமல், லியோ திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 500 கோடி ரூபாய் என்ற மைல்கல்லைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகிறது.
லியோ திரைப்படம் சனிக்கிழமை 46.34 சதவீதம் திரையரங்குகளை திரையிடப்பட்டது. தெலுங்கு சினிமா திரையரங்குகளில் களில் 38.15 சதவீதம், ஹிந்தி சினிமா திரையரங்குகளில் விகிதம் 15.74 சதவீதம் திரையிடப்பட்ட்டது.
ரஜினிகாந்தின் முந்தைய பிளாக்பஸ்டர் படமான ஜெயிலரின் சாதனையை லியோ திரைப்படம் முறியடிக்குமா என்ற நோக்கில் போட்டியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், லியோ பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டாலும், ஜெயிலர் படத்தின் வசூல் வேகத்தை விட பின்தங்கியுள்ளது.
ஜெயிலர் திரைப்படம் 10 வது நாள் வசூலில், 26.86 கோடி ரூபாய் வசூலித்தது. இதனுடன் ஒப்பிடும்போது, லியோவின் பாக்ஸ் ஆபிஸ் வருவாய் பின்தங்கியுள்ளது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் லியோ திரைப்படம் ரூ.500 கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ள நிலையில், ஜெய்லரின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலான ரூ.604 கோடியை இது முறியடிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் அனலிஸ்ட் மனோபாலா விஜயபாலன், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “லியோ தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல், தமிழ்நாட்டில் இரண்டாவது சனிக்கிழமை சென்சுரி அடித்துள்ளது. ஜெயிலர் vs லியோ நாள் வாரியாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஒப்பீடு
ஜெயிலர் திரைப்படம்
நாள் 1 - ரூ. 29.46 கோடி
நாள் 2 - ரூ. 20.25 கோடி
நாள் 3 - ரூ. 26.38 கோடி
நாள் 4 - ரூ. 31.04 கோடி
நாள் 5 - ரூ. 15.70 கோடி
நாள் 6 - ரூ. 24.85 கோடி
நாள் 7 - ரூ. 11.34 கோடி
நாள் 8 - ரூ. 6.29 கோடி
நாள் 9 - ரூ. 5.60 கோடி
நாள் 10 - ரூ. 9.47 கோடி
மொத்தம் ரூ. 180.38 கோடி
லியோ திரைப்படம்
நாள் 1 - ரூ. 27.63 கோடி
நாள் 2 - ரூ. 15.95 கோடி
நாள் 3 - ரூ. 13.32 கோடி
நாள் 4 - ரூ. 12.79 கோடி
நாள் 5 - ரூ. 9.51 கோடி
நாள் 6 - ரூ. 8.37 கோடி
நாள் 7 - ரூ. 3.14 கோடி
நாள் 8 - ரூ. 2.53 கோடி
நாள் 9 - ரூ. 2.40 கோடி
நாள் 10 - ரூ. 4.59 கோடி
மொத்தம் ரூ. 100.38 கோடி
இருப்பினும், சமீபத்தில் ரிலீஸான படங்களுடன் ஒப்பிடும் போது, கங்கனா ரணாவத்தின் தேஜஸ், விக்ராந்த் மாஸ்ஸி நடித்த விது வினோத் சோப்ராவின் 12ம் வகுப்பு ஃபெயில்,, நிம்ரத் கவுர், ராதிகா மதன், பாக்யஸ்ரீ மற்றும் சுமீத் வியாஸ் ஆகியோரின் சஜினி ஷிண்டே கா வைரல் வீடியோ, லியோ தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில், உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ல லியோ படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகியுள்ளது.
indianexpress.com-ன் அனந்து சுரேஷ், லியோ படத்திற்கு மூன்று நட்சத்திரங்களை அளித்து விமர்சனம் எழுதினார், “லியோ திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த குறிப்பில் தொடங்கினாலும், ஸ்கிரிப்ட் வாரியாக, அது இரண்டாம் பாதியில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்தது. வன்முறையின் வரலாற்றை லோகேஷ் எடுத்திருந்தாலும், படத்தில் அசல் தன்மை இல்லை, குறிப்பாக கதை கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பழமையானது. மேலும், அதில் உள்ள ஒரே புத்துணர்ச்சி ஒரு பிராந்திய தன்மையை உள்ளடக்கியுள்ளது. மேலும், “இருண்ட கடந்த காலத்தை உடைய நல்ல பையன்" என்பது பல இந்தியத் திரைப்படங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட ஒரு ட்ராப் என்பதால், எழுத்தாளர்-இயக்குனர் அதை மேலும் மேம்படுத்தத் தவறியதன் விளைவாக, லியோ இதுவரை லோகேஷ் எழுதிய குறைவான அழுத்தமான திரைக்கதையாக உள்ளது என்று எழுதினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“