Leo box office collection Day 3: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 3-வது நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலக அளவில் ரூ 200 கோடி வசூலைத் தாண்டியது. இதன் மூலம் விஜய்யின் லியோ 200 கோடி வசூலைத் தொட்ட 7-வது தமிழ் திரைப்படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Leo box office collection Day 3: Thalapathy Vijay-starrer leaps past Rs 200 crore global gross in three days, is already the 7th-biggest Tamil film ever
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'தளபதி' விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் மூன்றாவது நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.40 கோடி வசூலித்துள்ளது.
தளபதி விஜய்யின் ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படமான ‘லியோ’ வெளியான இரண்டே நாட்களில் இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அருமையான தொடக்கத்தில் உள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் கருத்துப்படி, லியோ வெளியான 3-வது நாளில் மட்டும் ரூ.40 கோடி வசூலித்தது. லியோ படத்தின் மொத்த வசூல் ரூ.140.05 கோடியாக இருந்தது. லியோ முதல் நாளில், இந்தியாவில் 64 கோடி ரூபாய் வசூலித்தது. இதன் மூலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ 44.5 கோடி சம்பாதித்த ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்தது. இருப்பினும், இரண்டாவது நாள் அவ்வளவு வலுவாக இல்லை. 2-வது நாளில் வசூல் ரூ. 35 கோடியாக குறைந்து 45% சரிவை சந்தித்தது. இதனால், உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்த ரஜினியின் ஜெயிலரை லியோவால் முறியடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ திரைப்படத்தில் விஜய் உடன், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் சார்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி ஊள்ளது. லியோ திரைப்படம் சனிக்கிழமை 76.25% தமிழ் திரையரங்குகளை ஆக்ரமித்திருந்தது.
சினிமா வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலாவின் கருத்துப்படி, “லியோ புதன்கிழமை ரிலீசான பிறகு, சனிக்கிழமையன்று அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் வசூலில் வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்காவில் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் ஆகிய இருவருக்குமே லியோ அதிக வருமானம் ஈட்டும் படமாகும். இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த ஏழாவது கோலிவுட் திரைப்படமாகும். சாக்னில்க் அறிக்கையின்படி, இப்படம் உலகளவில் ரூ.212 கோடி வசூலித்துள்ளது.
தமிழகத்தில் லியோ படம் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. மூன்றாவது நாளில் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூல் என மதிப்பிடப்பட்டுள்ளது. லியோ மற்ற பகுதிகளிலும் நல்ல வருமானம் ஈட்டுகிறது, கேரளாவில் இருந்து சுமார் ரூ 7 கோடியும், ஆந்திரா / தெலுங்கானா பகுதிகளில் இருந்து ரூ 5 கோடியும், கர்நாடகாவிலிருந்து ரூ 5.50 கோடியும் ஈட்டி வருகிறது. மாஸ்டருக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் லியோ. கார்த்தியின் கைதி மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய படங்களையும் உள்ளடக்கிய லோகேஷின் சினிமா தொடர் போலீஸ் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இப்படம் உள்ளது. லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்கும் திரைப்படத்தின் மூலம் வரலாற்றில் மிகப்பெரிய மூன்று தமிழ் நட்சத்திரங்களை இணைக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“