இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் லியோ திரைப்படம் ஜெயிலரை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையுமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த வார தொடக்கத்தில், ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டாரிடம் விஜய்யின் வரவிருக்கும் படம் லியோ பற்றி கேட்கப்பட்டது. படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார். இந்த அறிக்கை இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை ஒன்றிணைத்துள்ளது. சமீப ஆண்டுகளாக ரஜினிகாந்த் - விஜய் படங்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினியின் இந்த கருத்து ரசிகர்கள் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல, முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 100 கோடியைத் தாண்டியது. ஜெயிலரின் வெற்றிக்குப் பிறகு, ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கிங் என்பதை மீண்டும் உறுதி செய்தார்.
இந்த நிலையில் விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்ற கேள்வியும் போட்டியும் எழுந்துள்ளது. இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் விஜய் முதலிடம் பிடிப்பாரா என்று கணிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள வர்த்தக நிபுணர்களிடம் பேசியது.
ரஜினியின் ஜெயிலர் படம் வெளியான 17 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 525 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. அதுதான் கடைசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு. இருப்பினும், ஜெயிலர் படம் இறுதியில் ரூ 600 கோடியைத் தாண்டியதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினியின் 2.0 படத்துக்குப் பிறகு, ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படும் இரண்டாவது பெரிய வசூல் சாதனையாக தற்போது ஜெயிலர் படத்தின் சாதனை கருதப்படுகிறது.
இதனுடன் ஒப்பிடுகையில், விஜய்யின் வாரிசு பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ 300 கோடியை வசூல் செய்தது. இது விஜய் படத்தின் தனிப்பட்ட சாதனையாகும். விஜய்யின் முந்தைய படமான வாரிசு வசூலை மிஞ்சும் திறன் லியோவுக்கு உள்ளது. ஆனால், இந்த படம் இந்திய பார்வையாளர்களை ஈர்க்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும், இது அதன் வெற்றிக்கு முக்கியமானது.
நீண்ட காலத்திற்கு லியோவின் செயல்திறனை அளவிடுவது கடினம் என்றாலும், திரைகளின் எண்ணிக்கை மற்றும் டிக்கெட்டுகளுக்கான நம்பமுடியாத தேவை ஆகியவற்றை வைத்து சாத்தியமாகும் என்கிறார்கள். சினிமா டிரேட் அனலிஸ்ட் ரமேஷ் பாலா பேசுகையில், “ஜெயிலரின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸை லியோ முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்” என்றார். மேலும், “இந்தியாவில் முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக நான் கணிக்கிறேன். உலக அளவில், தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், தொடக்க நாளில் ரூ.100 கோடி வசூலிக்கலாம். முதல் நாளில் 70 கோடிக்கு மேல் வசூல் என்றால் விஜய்யின் லியோ தெளிவாக உள்ளது என்று அர்த்தம்.
லியோவின் எத்தனை நாள் ஓடும் என்று கணிப்பது அதன் தரத்தைப் பொறுத்தது என்றும், அது உண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களின் தொடர்ச்சியான ஒரு பகுதி என்று பாலா கூறினார். “இருப்பினும், லோகேஷ் கனகராஜின் வழக்கமான படம் இல்லை என்றால், அது லாபத்தில் 20 சதவீதத்தைத் பாதிக்கும். எல்.சி.யு (LCU) விற்கு பிரத்யேக பார்வையாளர்கள் உள்ளனர், மேலும் படம் அதன் ஒரு பகுதியாக இல்லாவிட்டால், அங்கு ஒரு தாக்கம் இருக்கும், ”என்று அவர் கூறினார்.
தெலுங்கு மற்றும் மலையாள சினிமா பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள்:
கேரளா பெல்ட்டில் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. அது எந்த அளவுக்கு பெரியது என்றால், சில மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு சவால் விடும் அளவுக்கு பெரியது. வர்த்தக ஆய்வாளரும் கட்டுரையாளருமான ஸ்ரீதர் பிள்ளை, “மலையாளத் திரையுலக வரலாற்றில் லியோவுக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைக்கும் என்பது உறுதி. கேரளாவில் லியோ ரூ.10 கோடி வசூலை எளிதாக செய்வார். தற்போது ஜெயிலர் ரூ.7.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தளபதி விஜய் லியோ படம் மீண்டும் அவருடைய இடத்துக்கு கொண்டு வருவது நிச்சயம்” என்றார்.
தெலுங்கு மாநிலங்களில் பெரிய ஸ்டார் படங்களின் வெளியீடுகள் வரிசையாக உள்ளன. “விஜய் இதற்கு முன் பெரிய (தெலுங்கு) நட்சத்திரங்களுடன் போட்டியிட வேண்டியதில்லை. அவரது அனைத்து படங்களின் வெளியீடுகளும் தீபாவளி அல்லது தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும். வாரிசு கூட சங்கராந்தி அன்று ரிலீஸ் ஆவதில் தாமதமானது. பெரிய தெலுங்கு நட்சத்திரங்களுடன் போட்டியிட்ட ஒரே விஜய் படம் மாஸ்டர். பாலகிருஷ்ணா (பகவந்த் கேசரி அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது) போன்ற பெரிய தெலுங்கு நட்சத்திரங்களுடன் விஜய் போட்டியிடுவது புதிய நிகழ்வு. பாலகிருஷ்ணாவின் படம் உச்சத்தில் இருக்கும். லியோ மட்டும் வெளிவந்திருந்தால், ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலான12 கோடி ரூபாயை (மொத்தம்) முதல் நாளிலேயே வசூலித்திருக்கலாம். தற்போதைய முன்பதிவு மூலம், லியோ 70 சதவீதத்தை நெருங்கலாம்.” என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“