Advertisment

ஜெயிலர் வசூலை முந்திய லியோ; தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லியோ படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலித்து அசத்தல்; ஜெயிலர் சாதனை முறியடிப்பு; தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

author-image
WebDesk
New Update
leo jailer

லியோ படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலித்து அசத்தல்; ஜெயிலர் சாதனை முறியடிப்பு; தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்துள்ளதாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்துள்ளது.

Advertisment

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் வெளிவந்த லியோ படத்தில் விஜய் உடன் 15 வருட இடைவெளிக்குப் பின் த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்தை தயாரித்தார்.

படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால், படம் வெளியாவதற்கு முன்பே வசூலை வாரிக் குவித்தது. மேலும் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் எந்த தொய்வும் இல்லை. வெளியான 4 நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடியை லியோ படம் வசூலித்தது.

மேலும், படம் வெளியாகி 7 நாட்களில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலை லியோ’ படம் ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அக்டோபர் 19ஆம் தேதி வெளியான விஜய்யின் லியோ திரைப்படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று முன் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகம், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிகபட்சமாக 525 கோடி ரூபாயை வசூலித்தாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், அந்த வசூலை லியோ முறியடித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை லியோ தாண்டியதை அறிந்த விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். நாளை லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற உள்ள நிலையில், நாளை இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றே டிஜிட்டல் வாயிலாக லியோ படத்தின் 12வது நாள் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 3வது வார இறுதியிலும் லியோ படம் வசூல் மழை பொழிந்தால், ரூ.600 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rajinikanth Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment