Leo box office collection Day 2: விஜய்யின் லியோ படத்தின் 2-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிசமான அளவில் வீழ்ச்சியைக் கண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.
விஜய்யின் ஆக்ஷன் திரில்லர் படமான லியோ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் கருத்துப்படி, லியோ படம் முதல் நாளில் (வியாழக்கிழமை) உலக அளவில் ரூ 148.5 கோடி வசூலைக் குவித்துள்ளது. இந்தியாவில் சுமார் ரூ.64.80 கோடியை ஈட்டியுள்ளது. இருப்பினும், அதன் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை, லியோ படத்தின் வசூலில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா இண்டஸ்ட்ரீ பாக்ஸ் ஆபிஸ் கண்காணிப்பாளரான Sacnilk கருத்துப்படி, லியோ இந்தியாவில் ரூ. 36 கோடி வசூலித்துள்ளது. இது வியாழக்கிழமை முதல் நாள் வசூலில் கிட்டத்தட்ட 50% வீழ்ச்சி அடைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய படத்தின் லியோ படம் தமிழ் திரையரங்குகளில் 66.85% மட்டுமே வெளியாகி உள்ளது.
லியோ படம் குறித்த எதிர்மறையான பேச்சுகளால் தமிழ்நாட்டிற்கு வெளியே படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக திரைப்பட வர்த்தக நிபுணர் மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டிற்கு வெளியே நாளை முதல் லியோ திரையிடல்கள் குறைக்கப்படுகின்றன. அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மோசமான பேச்சுகள் காரணமாக, உலகம் முழுவதும் 2-வது நாளிலேயே பல லியோ திரையிடல்கள், மற்ற திரைப்படங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா மார்க்கெட்டில் லியோ முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தி சினிமா மார்க்கெட்டில் விஜய் நடித்த படத்தை வாங்குபவர்கள் குறைவு, திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, இந்தி மார்க்கெட்டில் லியோ ரூ.2.75 கோடி மட்டுமே வசூலித்ததாக குறிப்பிட்டார். 20.25 கோடி வசூலுடன், இந்தி பேசும் பெல்ட்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக ரஜினியின் 2.0 உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட திரை விமர்சனங்களுக்கு பிறகு லியோ படத்துக்கு பார்வையாளர்கள் செல்வது எளிதாக இல்லை. ஆனால், Indianexpress.com இன் ஆனந்து சுரேஷ், விஜய்யின் நடிப்பைப் பாராட்டினார். ஆனால், லியோ படம் எழுத்து மற்றும் இயக்கத்தின் அடிப்படையில் இல்லை என்று கூறினார். அவர் தனது விமர்சனத்தில் பதிவிடுகையில், “லியோ திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த குறிப்பில் தொடங்கினாலும், ஸ்கிரிப்ட் வாரியாக, அது இரண்டாம் பாதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை அடைந்துள்ளது. லோகேஷ் வன்முறையின் வரலாற்றை வெறுமனே மொழிபெயர்த்திருந்தாலும், படத்தில் அசல் தன்மை இல்லை, குறிப்பாக கதை கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பழமையானது, மேலும் அதில் உள்ள ஒரே புத்துணர்ச்சி ஒரு பிராந்திய சாரத்தை உள்ளடக்கியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“