Advertisment

ரிலீசுக்கு 40 நாள் முன்பே அட்வான்ஸ் புக்கிங்: இங்கிலாந்தில் லியோ சாதனை

விஜய்யின் லீயோ படம் ரிலீசுக்கு 40 நாள் முன்பே, முன்பதிவு மூலம் இங்கிலாந்தில் 92 இடங்களில் 175 காட்சிகளுக்கு 5500 டிக்கெட்டுகள் 60,000 பவுண்ட்ஸ்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Leo

விஜய்யின் லீயோ படம் ரிலீசுக்கு 40 நாள் முன்பே, முன்பதிவு மூலம் இங்கிலாந்தில் சாதனை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லீயோ படம் ரிலீசுக்கு 40 நாள் முன்பே, அட்வான்ஸ் புக்கிங் மூலம் இங்கிலாந்தில் 92 இடங்களில் 175 காட்சிகளுக்கான 5500 டிக்கெட்டுகள் 60,000 பவுண்ட்ஸ்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Advertisment

தென்னிந்திய சினிமா துறையில்  இருந்து கே.ஜி.எஃப், பாகுபலி, புஷ்பா ஆகிய படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற படங்கள். இப்போது எல்லோருடைய கண்களும் பிரபாஸ் நடித்துள் சலார் படத்தின் முதல் பாகம் ரிலீசுக்கு முன்பே அமெரிக்காவில் பெரிய அளவில் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இது ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தைவிட அதிக அளவில் வசூலித்துள்ளது. ஆனால், சலார் படத்தின் ரிலீஸ் தேதி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் ஏற்பட்ட சிக்கல்களால் தள்ளிப்போனது. 

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படமான லியோ மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

லியோ படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, லியோ படத்தின் முன்பதிவு செப்டம்பர் 7-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

இப்போதைக்கு, லியோ படம் 175 காட்சிகளுக்கு 92 இடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு 5500 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றுள்ளது. இதன் மூஉலம், 12 மணி நேரத்தில் 60000 பவுண்டுகளுக்கு மேல் ($76000 அமெரிக்க டாலர்கள்) முன்பதிவு டிக்கெட் மூலம் விற்பனை ஆகியுள்ளது. இது இன்னும் முழுமையான விவரம் இல்லை. 

தளபதி விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ள இப்படம் பல்வேறு காரணங்களுக்காக மிகுந்த சலசலப்பையும், பரபரப்பையும் பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு, விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோ படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

இந்த படம் கார்த்தியின் கைதி, கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களை ஒன்றிணைக்கும் லோகேஷின் சினிமா ஸ்டைலின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

லியோ படத்தில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம், விஜய்யும் த்ரிஷாவும் 17 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படம் சஞ்சய் தத்தின் முதல் தமிழ்ப் படமாகவும், கே.ஜி.எஃப் 2 படத்திற்குப் பிறகு, வில்லனாக நடிக்கும் இரண்டாவது படமாக இருக்கிறது. இப்படத்தில் அவர் விஜய்யின் அப்பாவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. லியோ படத்தில் கடைசியாக நுழைந்தவர் அனுராக் காஷ்யப். லோகேஷ் தனது நடிகர்களுக்கு மிகச் சிறப்பான கதாபாத்திரத்தைக் கொடுப்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் கடைசியாக வெளியான பீஸ்ட்/ரா படத்திற்கு மந்தமான வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஜனவரி 2023-ல் லியோ படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரிலும், அதைத் தொடர்ந்து சென்னையிலும் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதையடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், தேவா வில்லனாகவும் நடிக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. முக்கிய வேடத்தில் நடிக்க பிரசாந்தை அணுகியுள்ளனர். நடிகர்கள் பிரபுதேவா, சினேகா, சிம்ரன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment