ஆங்கிலத்தில் படிக்க...
லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், இன்று லியோ படத்தின் 2-வது சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 2-வது படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், அர்ஜுன் சர்ஜா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சாதாரன வாழ்க்கையை நடத்தி வரும் ஒரு ஹிட்மேனின் கதையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்ள் அதிக தேவை காரணமாக லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் விஜய்யின் டிரேட்மார்க் பேச்சு இடம்பெறும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனிடையே அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பை லியோ தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள புதிய போஸ்டரின்படி, லியோவின் இரண்டாவது பாடலான படாஸ் வியாழக்கிழமை (இன்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே “நா வரவா” என்ற முதல் பாடலின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த அனிருத் ரவிச்சந்தர், இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அவர், “லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் சார் அணு ஆயுதம் எடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் விக்ரமுக்காக “போர்கண்ட சிங்கம்”, மாஸ்டருக்காக “போனா போகட்டும்” போன்ற பாடல்களை எழுதிய விஷ்ணு எடவன், மீண்டும் அனிருத்துடன் “பேடாஸ்” படத்தில் இணைந்துள்ளார்.
ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை ஈடுகட்ட லியோ படத்தின் ட்ரெய்லரும் அடுத்த வாரம் வெளியாகும் என தற்போது கூறப்படுகிறது. படத்தின் சலசலப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க தயாரிப்பாளர்கள் வித்தியாசமான உத்தியைக் கொண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“