New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Varisu-Thee-Thalapathy.jpg)
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் வகையில் படத்தின் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஷாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தில்ராஜூ தயாரித்து இருக்கும் இந்தப் படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்கள்: அவரை நான் இன்னும் மறக்கவில்லை… அதற்குள் எப்படி? திருமண வதந்திக்கு மீனா முற்றுப்புள்ளி
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வாரிசுப் படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே, ரஞ்சிதமே பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரிய ஹிட் ஆகியுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். நடிகர் விஜய்யுடன் மானசி இணைந்துப் பாடிய இந்தப் பாடல் இதுவரை யூடியூபில் 75 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் ஞாயிற்றுகிழமை (டிசம்பர் 4) மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தீ தளபதி எனத் தொடங்கும் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடலையும் விவேக் எழுதியுள்ளார்.
Thank You @SilambarasanTR_ Sir.. You made #TheeThalapathy a memorable experience.. it means a lot to us for what all You have done to make this song so Special... 🙏🤗#Varisu #VarisuPongal https://t.co/O4TBJF0plL
— Vamshi Paidipally (@directorvamshi) December 3, 2022
திரைத்துறையில் 30 வருடங்களை நிறைவு செய்துள்ள விஜய்க்கு இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாடல் வேற லெவலில் உள்ளதாகவும், பாடலால் ஏற்படும் உற்சாகத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிறப்பாக பாடியதற்காக சில ரசிகர்கள் சிம்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.