/tamil-ie/media/media_files/uploads/2022/11/Vinoth-kamal-Sethu.jpg)
KH 233
Kamal Haasan Upcoming Movie : விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விக்ரம் படத்தில் நடித்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் பகத் பாசில், விஜய்சேதுபதி நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலிலும சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல்அகர்வால். சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியாபவானி சங்கர், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஏற்கனவே தலைவன் இருக்கிறான் என்ற படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்த கமல்ஹாசன், தனது பிறந்த நாளில், தனது 234 வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிகக் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னதாக தனது 233-வது படமாக வலிமை துணிவு பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான், படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய்சேதுபதி, மீண்டும் கமல்ஹாசன், படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.