Advertisment

ஆல்யா பர்த்டே சர்ப்பரைஸ்லாம் ஓகே.. ஆனா மேரேஜ் டே மறந்துட்டிங்களே சஞ்சீவ்!

alya manasa surprise birthday: ரசிகர்கள் பலரும் ஆல்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
May 29, 2021 18:44 IST
alya manasa sanjeev

சின்னத்திரையின் மிகவும் பிரபலமான ஜோடி ஆல்யா மானசா-சஞ்சீவ். விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் நடித்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர்கள் அவ்வபோது வீடியோ அப்லோடு செய்து வருவார்கள் . அப்படி லேட்டஸ்டாக ரிலீஸ் செய்தது ஆல்யா பர்த்டே ஸ்பெஷல் வீடியோதான்.

Advertisment
publive-image

ஆல்யாவுக்கு கடந்த வியாழக்கிழமை பிறந்தநாள் . சஞ்சீவ்வும் சர்ப்பரைஸாக இரவு 12 மணிக்கு கேக் ஆர்டர் செய்து பக்காவா அரேஞ்மெண்ட்ஸ் பண்ணி ஆலியா வை அழைத்து வருகிறார். ஹபி பர்த்டே ஆலியா என கைக்கொடுக்கும் சஞ்சீவுக்கு, திருப்பி தேங்க்ஸ் ஹபி அனிவர்ஸரி என்கிறார் ஆலியா. அப்போது தான் இன்று திருமண நாள் என்பதே சஞ்சீவுக்கு நியாபகம் வருகிறது. மேரேஜ் ஆகி 2வது வருடமே திருமண நாளை மறந்த சஞ்சீவை ஆலியா செல்லமாக கோபித்து கொள்கிறார். பிறகு கேக் கட் செய்து ஆலியா அனைவருக்கும் கொடுக்கிறார். டைரிமில்க் கிஃப்டுடன், பலரின் வாழ்த்தும் கிடைக்கிறது.

லாக்டவுன் என்பதால் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடியுள்ளார். தொடர்ந்து பானி பூரி செய்து யார் அதிகமாக சாப்பிடுகிறார்கள் என போட்டி நடைபெறுகிறது. அதில் சஞ்சீவ் உறவினர் சங்கீதா வெற்றி பெற ஆலியா தோல்வி அடைந்தார். பிறகு மொட்டை மாடியில் ஒரு ரவுண்ட், விளையாட்டு என ஹபியாக முடிந்தது ஆலியா பர்த்டே பார்ட்டி.

இளைஞர்களின் இந்த ஃபேவரேட் பேர் தங்களது யூடியூப் சேனலில் எந்த வீடியோ போட்டாலும் அது வைரலாகும். ஆலியா பர்த்டே என்பதால் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. ரசிகர்கள் பலரும் ஆல்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு என்ன சஞ்சீவ் அதுக்குல்ல கல்யாண நாள மறந்துட்டீங்க என கிண்டலடித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Vijaytv Serial #Alya Manasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment