திரைத்துறை பிரபலங்களை காட்டிலும், தங்களது இல்லங்களை தினசரி அலங்கரிக்கும் சின்னத்திரை பிரபலங்களுக்கு, ரசிகர்கள் அமோக வரவேற்பை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வழங்கி வருகின்றனர்.
தங்களின் ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல சின்னத்திரை பிரபலங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியலில் ‘ஜெனி’ கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், நடிகை குஷ்பு பிரபலமடைந்த ‘ஒத்தரூவாயும் தாரேன்’ என்ற கரகாட்ட பாடலுக்கு கரகாட்டம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
திவ்யா கணேஷின் இன்ஸ்டாகிராம் பதிவில், ‘பாரம்பர்ய நடனமான கரகாட்டத்தின் மீது அதிகப்படியான விருப்பம் இருப்பதால், கற்றுக் கொள்ள நிறைய ஆசை இருக்கிறது. அதன் படி, என் முயற்சி இது’ என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ திவ்யா கணேஷின் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளதால், பலரும் அந்த வீடியோவை ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil