பிக் பாஸ் டீமுடன் கைகோர்க்கும் ராஜமாதா? வேற லெவல் பிளான்

Bigg Boss Jodigal: விஜய்டிவியின் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர்கள் யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல் தொடர்களை போலவே ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதுவும் விஜய்டிவி நடத்தும் ஷோக்களுக்கு தனி ரெஸ்பான்ஸ்தான். அதற்கு முக்கிய காரணம் மக்களிடம் நல்ல ரீச் ஆன சீரியல் தொடர்களிலிருந்தும், ஷோக்களலிருந்து நடிகர்களை அழைத்து வந்து அவர்களை வைத்து ஒரு தனி ஷோ நடத்தி ஹிட் ஆக்குவார்கள். விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவிற்கு தனி ரகிர்கள் பட்டாளமே உள்ளது. நான்கு சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போதும் அடுத்த சீசன் எப்போது தொடங்கப்படும் என அதன் ரசிகர்கள் ஆவலாக காத்து கிடக்கின்றனர் .ஷோ ஹிட்டானதை விட அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்ல ரீச் கிடைத்தது. முதல் சீசனில் ஓவியா முதல் கடந்த சீசன் ஆரி வரை அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் கிடைத்துள்ளது.

இதில் கலந்துகொண்ட பின் பலருக்கு படவாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின. பிக் பாஸில் கலந்துகொண்டாலே புகழ் பெற்றுவிடலாம் என ஏராளமான பிரபலங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு வருகிறது விஜய் டிவி.

அந்த வகையில் பிக் பாஸ் ஜோடிகள் என்ற பெயரில் பிக் பாஸ் பிரபலங்களை ஒன்றிணைத்து புது ஷோ விஜய் டிவியில் தொடங்க உள்ளது. அதில் நான்கு சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். பிக்பாஸ் ஜோடிகள் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில், சோம் – ஷிவானி, ஆஜித் – கேபி, வனிதா – சம்யுக்தா – ஷாரிக், தாடி பாலாஜி – நிஷா ஆகியோர் ஜோடிகளாக பங்கேற்க உள்ளது உறுதியானது. மேலும் சென்ராயன், மோகன் வைத்யா உள்ளிட்டவர்களும் அந்த ப்ரொமோவில் இடம் பெற்றிருந்தனர்.

இதைதொடர்ந்து யார் நடுவர்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிர்களிடையே அதிகமானது. இந்நிலையில் தற்போது இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகர் ஜீவாவும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியாளர்கள், நடுவர்கள் பற்றி தகவல் எல்லாம் வந்தாச்சு நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திக்கிடக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv bigg boss jodigal reality show check contestants judges

Next Story
காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள்: கனி கணவர் நெகிழ்ச்சிப் பதிவுcook with comali, cook with comali title winner kani, director thiru, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, கனி, கனி கணவர் இயக்குனர் திரு, காதல் கோட்டை சூர்யா, kani husband director thiru, kadhal koattai movie surya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com