விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் பவானி ரெட்டியுடன் இணைந்து நடித்தார். இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாததால் ஜூன் மாதம் துவங்கி அக்டோபர் மாதமே நிறுத்தப்பட்டது.இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.
அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் நடித்தார் அஸ்வின். அந்த சீரியல் ஓரளவிற்கு ஓடியது. ஆனால், இவருக்கு பிரபலம் ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த சீசனில் இவர் ஷிவாங்கியுடன் pair ஆக வந்து செய்யும் விஷயங்கள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
ஆனால் அஸ்வின் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ராஜா ராணி சீரியலில் நடித்துள்ளார். உண்மைதான். தெலுங்கு மா டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் இவர் நடித்துள்ளார். இதுபற்றி இதுவரை அஸ்வின் ஏதும் குறிப்பிடவில்லை. இந்த சீரியலில் தமிழில் ஒளிபரப்பாகி பெரிதும் வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் ரீ மேக்தான்.குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் ‘குட்டி பட்டாசு’ என்ற பாடலில் அஸ்வின் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து traident மீடியா தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் அஸ்வின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”