/tamil-ie/media/media_files/uploads/2021/04/kumaran.png)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் உள்ளனர். அதுவும் இந்தத் சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கதிர் என்ற கதாபாத்திரத்தில் குமரன் நடித்து வருகிறார். முல்லை என்ற கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார்.அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவிய அறிவுமணி நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாக குமரன் சீரியலில் இடம்பெறவில்லை வெளியூர் சென்று இருப்பது போல காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த சீரியலை விட்டு குமரன் விரைவில் விலகப்போவதாக தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதற்கு முக்கிய காரணமே குமரன் சமீபத்தில் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி தான். அதில், உங்கள் எல்லோருக்கும் ஷோ பிடித்திருக்கும் என நம்புகிறேன். நான் தான் இந்த ஷோவுக்கு பெஸ்ட் ஆடியன்ஸ், முழுக்க சிரித்து கொண்டிருந்தேன். மேலும் நீங்கள் ஷோவை மட்டும் தான் பார்த்தீர்கள். அதிகமும் இல்லை, குறைவாகவும் இல்லை. எதுவும் வெட்டப்படவும் இல்லை, சேர்க்கப்படவும் இல்லை. ஜெயிக்கிறோமோ இல்லையோ, நான் மகிழ்ச்சியாக இருந்தேன் . அதே போல நீங்கள் பார்த்ததை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். தற்போது ஓரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். அடுத்து என்ன?" என பதிவிட்டுள்ளார். இதனால் குமாரன் இந்த சீரியலை விட்டு விலகப்போகிறாரா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒருவேளை குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகுகிறாரோ என சீரியல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.