விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களிலேயே அதிகம் பேரை கவர்ந்தது குக் வித் கோமாளிதான். இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்குமே மக்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. குக்குகளுடன் கோமாளிகள் செய்யும் அலைப்பறைகளாலே இந்த
ஷோ ஹிட் ஆனது. இதில் கலந்துகொண்ட அஸ்வின், சிவாங்கி, பவித்ரா, புகழ் என பலரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக ஷோவில் புகழ் செய்யும் அட்ராசிட்டிஸ் ரசிக்கும்படி இருக்கும். ஷிவாங்கியுடனான தங்கை செண்டிமெண்ட், பவித்ராவுடனான ரொமன்ஸ் என பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர்.
தற்போது புகழ் சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தாலும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி அவ்வபோது ஏதேனும் ஒரு ஷோ நடத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி-யில் நகைச்சுவை கலந்த இளைஞர்களுக்கான ரியாலிட்டி ஷோ-வாக முரட்டு சிங்கிள்ஸ் உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் புகழ் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய் டிவி வெளியிட்டுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோவில் புகழ், என்னையெல்லாம் முன்னாடி மதிக்கவே மாட்டார்கள் இப்போது யார் பார்த்தாலும் என்ன புகழ் என்னை மறந்துட்டியா என்று கேட்கும் அளவிற்கு நான் வளர்ந்து விட்டேன் என கூறியுள்ளார். நான் வளர்ந்ததுக்கு அப்புறம் தான் உனக்கு என்னை தெரிந்தது என பதிலுக்கு புகழ் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பல நாள் வருத்தப்பட்ட அழுதுள்ளதாகவும் கூறுகிறார்.
முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் புகழ் பேசிய இந்த செண்டிமெண்ட் டாக் வீடியோ யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”