பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மாற்றமா? யார் இந்த சாய் காயத்ரி?

ஐஸ்வர்யாவாக நடித்து வரும் தீபிகா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும், அவருக்கு பதில் நடிகை சாய் காயத்ரி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

pandiyan stores

விஜய் டிவியில் முன்னணி டிஆர்பியில் உள்ள தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் கூட்டு குடும்பம் பற்றிய கதைதான். அண்ணன் தம்பி இடையேயான ஒற்றுமை, அண்ணியின் பாசம் என அழகாக கதை நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் கடைக்குட்டி தம்பியாக நடித்து வரும் கண்ணன் சமீபத்தில் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட பின் கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சிரமப்படும் காட்சிகள், தம்பி மீதான பாசத்தில் மறைமுகமாக உதவும் அண்ணன்கள் என கதை நகர்ந்து வருகிறது. இதில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே தீபிகா. கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி ரொம்பவே பிரபலமானது. இன்ஸ்டாகிராமில் இருவரும் இணைந்து கலக்கும் ரீல்ஸ்கள் லைக்ஸ்களை அள்ளுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஐஸ்வர்யாவை ரசிகர்களே ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யாவாக நடித்து வரும் தீபிகா சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாகவும், அவருக்கு பதில் நடிகை சாய் காயத்ரி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமானவர் சாய் காயத்ரி புவனேஷ். ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற பல சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகுதான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனவர். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, சிவா மனசுல சக்தி, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே சீரியல் தான். இதில் அகிலா என்ற கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இந்த தொடரில் நடித்த அகிலா-புகழ் ஜோடியின் ரொமான்ஸ், சண்டை சீன்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 800 எபிசோடுகள் கடந்து வெற்றி பெற்ற இந்த தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. நடிப்பை தாண்டி ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், டான்ஸ் ஸ்டூடியோவையும் நடத்தி வருகிறார் சாய் காயத்ரி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் சாய் காயத்ரிக்கு பொருந்துமா என அவரது ரசிகர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர். கண்ணனுக்கு அக்கா போல் இருப்பார் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கண்ணன் ஐஸ்வர்யாவை சுற்றியே கதை நகர்ந்து வரும் நிலையில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டால் அது சீரியலின் வெற்றியை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv pandiyan stores aishwarya replaced by sai gayatri

Next Story
ரீல் ஜெயலலிதா மக்களை கவர்ந்தாரா? தலைவி விமா்சனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com