Advertisment

'முதல்ல நீங்க மாஸ்க் போடுங்க..!' போலீசுடன் மோதிய புகழ்; இது என்ன கலாட்டா?

Cook with comali pugazh and Bala recent prank video with police Tamil News: விஜய் டிவி பிரபலம் பாலாவுடன் ஒரு நேர்காணலுக்காக சென்ற புகழ் ஒரு போலீஸ்காரருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
May 25, 2021 11:48 IST
Vijaytv pugazh Tamil News: Cook with comali pugazh and Bala recent prank video with police

Vijaytv pugazh Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக 'குக் வித் கோமாளி' உள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருக்குமே இந்த நிகழ்ச்சி ஒரு புதிய திருப்பு முனையாக அமைந்தது. அதிலும் இந்த நிகழ்சியில் கலந்து கொண்டோர் முதல் ரசித்தோர் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து காமெடி விருந்து கொடுத்த புகழ், தனது வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.

Advertisment

தற்போது விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தும் வரும் புகழ், கொரோனா ஊரடங்காள் பசியில் வாடிய ஏழை எளிய மக்களுக்கு உணவை தனமாக வழங்கினார். இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதோடு இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களிலும் வைரலானது.

பிரபலங்கள் அனைவருமே தங்கள் யூடூப் தளம் வழியாக ரசிகர்களை மகிழ்விக்கும் வீடியோக்களை அப்டேட் செய்து வரும் நிலையில், புகழுக்கு புகழ் சேர்த்த ரசிகர்களோடு, தனது யூடூப் தளம் வழியாக அவ்வப்போது உரையாடியும், தான் செல்லும் ட்ரிப் குறித்த வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார் புகழ்.

இந்த நிலையில், விஜய் டிவி பிரபலம் பாலாவுடன் ஒரு நேர்காணலுக்காக சென்ற புகழ் ஒரு போலீஸ்காரருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தனது காரில் சென்ற புகழை ஒரு போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடிக்கிறார். ஊரடங்கு நேரத்தில் எங்கு போகிறீர்கள் என்று அவர் கேட்க, நேர்காணலுக்காக செல்கிறோம் என இருவரும் கூறுகின்றனர். அதை ஏற்க மறுத்து போலீசார் சத்தம் போட்டு பேசுகிறார். இந்த இரு பிரபலங்களும் தாங்கள் செலப்ரடீஸ் என்று கூறுகின்றனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத போலீசார் மீண்டும் சத்தம் போட்டு கத்தி சட்டம் பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் கடுப்பான இந்த இரு பிரபலங்களும் மொதல்ல நீங்க மாஸ்க் போடுங்க சார் என அந்த போலீஸ்காரரை மடக்குக்கின்றனர். இவ்வளவு நேரம் சத்தம் போட்டு சட்டம் பேசிய அந்த போலீஸ்காரர் மாஸ்க் போடாமல் வசமாக சிக்கிக் கொண்டார்.

போலீஸ்காரர் தங்களிடம் வசமகா சிக்கியதை கவனித்த புகழ் மற்றும் பாலா, இது சும்மா ப்ராங்க் வீடியோ தான் என்று கூறுகின்றனர். சத்தம் போட்ட போலீஸ்காரர் வேறு யாரும் இல்லை, தங்களின் நண்பர் தான் என்று கூறுகின்றனர்.

ரியல் போலீஸ் போல் நடித்த அவர்களின் போலீஸ்காரர் நண்பர், ஊரடங்கு சமயத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறையை சரியாக பின் தொடர வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் இது தான் தங்களின் சோஷியல் மெசேஜ் என்றும் கூறுகின்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

#Cooku With Comali #Cook With Comali #Bala #Vijay Tv Cook With Comali #Cook With Comali Pughal #Vijaytv Pugazh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment