Vijaytv pugazh Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்தவர் புகழ். காமெடிக்கு பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களையும், நிகழ்ச்சியில் பங்கு பெறுவோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து காமெடி விருந்து கொடுக்கும் நபர்களில் முக்கியனமானவர். அதோடு தங்கை சிவாங்கியுடன் இவர் சேர்ந்து வெடிக்கும் காமெடிகளுக்கும், சென்டிமென்ட் டயலாக்குகளுக்கும் தனி ரசிகர்களே உண்டு.

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தோன்றி சில பல காமெடிகளை வெடிக்க விடும் புகழ் கை வசம் நிறைய படங்களை வைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தும் வருகிறார்.

தற்போது, இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவை தனமாக வழங்கி வருகிறார் புகழ். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)