Vijaytv pugazh Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா பிடித்துள்ளார் புகழ். தற்போது முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வரும் இவர், அவ்வப்போது தனது யூடூப் சேனலில் வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில் வீட்டில் கார் கழுவும் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மிகவும் உருக்கமாக பேசியுள்ள புகழ், ஒரு காலத்தில் கார் வாஷ் செய்யும் கடையில் பணியாற்றினேன் என்றும், அங்கிருந்து படிப்படியாக முன்னேறி தற்போது சொந்தமாக கார் வாங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு கார் கழுவும் போது பழைய நினைவுகளை மீண்டும் நியாபகப் படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
புகழ் இந்த வீடியோவை பதிவு செய்கையில் அவரது நண்பர் ராஜா உடன் இருக்கிறார். தாங்கள் இருவருமே சாலிகிராமத்தில் உள்ள கடையில் தான் வேலை பார்த்ததாகவும், காரை சரியாக கழுவினோமா என்பதை சூப்பர்வைசர் செக் செய்வார் என்றும் கூறுகிறார்.
விரைவில் கார் வாஷ் கடை திறக்க உள்ளதாகவும், மறக்காமல் அந்த 10 ரூபாய் டிப்ஸ் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றும் விளையாட்டாக புகழ் கூறுகிறார்.
புகழ் புதியதாக கார் வாங்கும் போது, அதை ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தார். அதோடு இந்த வளர்ச்சிக்கு நீங்கள் தான் காரணம் என்று ரசிகர்களுக்கு நன்றியும் கூறி இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)