New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/alya-manasa.jpg)
Alya Manasa makeup video: தற்போது லேட்டஸ்டாக சஞ்சீவுக்கு தெரியாமல் ஆல்யா சர்ப்பரைஸாக யூடியூப் வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய்டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் மிகவும் பிரபலமான ஜோடி சஞ்சீவ்- ஆல்யா மானசா. இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் ஆல்யா என்ற மகள் உள்ளார். இந்த ஜோடி யூடியூப் சேனல் ஒன்றை கடந்த மார்ச் மாதம் தொடங்கினர். லாக்டவுனில் ஷூட்டிங் இல்லாத ப்ரீ டைமிங்கில் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அவ்வபோது பர்த்டே சர்ப்ரைஸ் வீடியோ, ட்ராவல் vlog என பதிவிட்டு வருகின்றனர்.
ஆல்யா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த தொடரில் அவரது உடுத்தும் சாரீஸ்கே தனி ரசிகர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு என்பதால் தனது குடும்பத்துடன் தான் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். லாக்டவுனில் அவர்கள் செய்யும் விஷயங்களை வீடியோவாக எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார் சஞ்சீவ். மூன்று மாதங்களில் 4 லட்சம் சப்ஸ்கரைபர்களை நெருங்கியுள்ளது இவர்களது சேனல்.
தற்போது லேட்டஸ்டாக சஞ்சீவுக்கு தெரியாமல் ஆல்யா சர்ப்பரைஸாக யூடியூப் வீடியோ வெளியிட்டுள்ளார். தான் ராஜா ராணி2 சீரியலுக்கு சந்தியாவாக எப்படி மேக் அப் போட்டு ரெடியாவேன் என காண்பித்துள்ளார். எந்த பிராண்ட் ஃபேஸ் வாஷ், ஃபேஸ் மாஸ்க், மேக் அப் டோன் பயன்படுத்துவது, ஹர் ஸ்டைல், சாரீஸ் குறித்தும் கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.