விஜய் தொலைக்காட்சியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதில் நடித்துள்ளார். பிறகு விஜேவாக சிறுது காலம் இருந்துள்ளார். முதல்முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்து அதற்கு பிறகு சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற தொடரிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது பாக்கியலட்சுமி ஜெனியாக நடித்து கலக்கி வருகிறார்.















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”