விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் உள்ளது ‘பாரதி கண்ணம்மா’. கண்ணமாவுக்கு தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர்.இவரை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ஸ்வீட்டி. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆடிஷன் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பார்த்த அவர், தனது புகைப்படங்களையும் டிக்டாக் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.அப்படித்தான் அவருக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தனது இயல்பான ஜாலி கேரக்டருக்கு கான்ட்ராஸ்டாக வில்லியாக நடித்துள்ளார்.















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”