vijaytv serial bharathi kannamma hotstar bharathikannamma : விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா. கூட்டு குடும்பம், மற்றும் கணவன் மனைவி இடையே நடைபெறும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் கூட்டங்கள் அதிகம்.
இந்த சீரியலில் நாயகி கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியன் தாஸ; ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா பாரதியை பிரிந்து சென்ற நிலையிலும், வெண்பா அவரை கொலை செய்ய பல வழிகளில் முயற்சி செய்து தொல்வியடைகிறார். இதற்கிடையே கர்ப்பமாக இருந்த கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்று கண்ணம்மாவுக்கு தெரிவதற்குள் அவரது அத்தை சௌவுந்தர்யா ஒரு குழந்தையை எடுத்துச்சென்று விடுகிறார். அதனைத் தொடர்ந்து சௌந்தர்யா கண்ணம்மாவை பல இடங்களில் தேடுகிறார். ஆனால் எங்கும் அவர் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பல ஊர்களில் பல தொழில்கள் செய்து வரும் கண்ணம்மா 8 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்புகிறார். இதில் சமையலில் அசத்தும் கண்ணம்மாவுக்கு, அவரது அத்தையிடம் வளரும் கண்ணம்மாவின் மகள் ஹேமா படிக்கும் பள்ளியில் சமையல் காண்ராக்ட் கிடைக்கிறது. அப்போது ஹேமாவுக்கும் கண்ணம்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாகின்றனர். இந்த நெருக்கத்தினால் ஹேமா தங்களது வீட்டில் வந்து சமைக்க கண்ணம்மாவை அழைக்கிறார்.
பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா! ❤️
பாரதி கண்ணம்மா – இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/OwrFE8hJ2N
— Vijay Television (@vijaytelevision) February 23, 2021
மொத்த வீடும் கண்ணம்மாவை மருமகளாக பார்க்க, ஆனால் கண்ணம்மா மட்டும் தன்னை சமையல் காரியாகவே பார்க்கிறாள். அகில்- அஞ்சலி கண்ணம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க, செளர்ந்தர்யா தன் மருமகளை அவளுக்கு தெரியாமல் ஒளிந்து பார்க்க என உணர்ப்பூர்வமாக காட்சிகள் நகர, அகில் கண்ணம்மாவுக்கு பழைய மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்த பாரதி காதலி கண்ணம்மா பாடலை போடுகிறார்.
8 வருட பிரிவை இந்த பாடல் சேர்த்து விடுமா அகில் ?