விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையை சேர்ந்த இவர் ஒரு டான்ஸர். கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர். முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90’s ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி, அரண்மனை கிளி போன்ற பல சீரியல்களில் நடித்தார். தற்போது சித்தி2 தொடரிலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காயத்ரி.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil