/tamil-ie/media/media_files/uploads/2019/11/Pandian-Stores-Mullai-Kathir.jpg)
vijaytv serial pandian stores kathir mullai
vijay tv serial: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிரும், முல்லையும் காதலிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. முல்லையின் பிறந்த நாளில் இந்த காதல் ஆரம்பிக்குது. இதற்கு முன்பே ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருந்தாலும் அதை காமிச்சுக்க கால நேரம் கூடி வரலை. ரெண்டு பெரும் பேசிக்கணும்னு ஆசைப்படறாங்க. கதிர் வீடு எங்கே...முல்லை வீடு எங்கே இருக்குன்னு நீங்க யோசிக்க வேணாம்.. இருவருக்கும் ஒரே வீடுதான்...அப்படியான்னு நீங்க ஆச்சரியப்படுவீங்க... இன்னும் ஒண்ணு சொல்றேன். அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூம்தான்...கடவுளே.. அப்படி இருந்துமா கதிர் இன்னும் முல்லைக்கிட்டே பேசலைன்னு நீங்க சலிச்சுக்குவீங்க...இன்னும் ஒண்ணும் சொல்றேன்.. ரெண்டு பெரும் புருஷன் பொண்டாட்டி...இப்பபோ எப்படி இருக்கு உங்க மன நிலைமை? அது பத்தி எல்லாம் இப்போ கவலை இல்லை.
பொண்டாட்டி முல்லைகிட்டே புருஷன் கதிர் விடிந்ததும் காலையில் பேச ஆசைப்படறான். ஆசையா அறைக்குள் முல்லையை உட்கார சொல்லி பேசலாம்னு போனா, ஜீவா அண்ணன் கூப்பிட்டு கணக்கு கேட்கறார். இவனும் தவித்தபடி வந்து கணக்கு எல்லாம் சொல்லிவிட்டு, ஜீவா அண்ணனின் போனை வாங்கி முல்லை பிறந்த நாள் கேக் வெட்டியதை போனில் ஜூம் செய்து பார்க்கிறான். என்னடா...இப்படி பார்க்கறே.. அந்த புள்ளைக்கிட்டே பேசுனியா இல்லையான்னு ஜீவா கேட்க, எங்கே பேசலாம்னு உட்கார்ந்தேன்...நீ கூப்பிட்டுட்டேன்னு சொல்றான் கதிர். அட பய புள்ளையே.. நீ சொல்லி இருந்தா நான் கூப்பிடாம விட்டு இருப்பேனடான்னு சொல்லிட்டு, அவனே முல்லையும் கதிரும் பேச ஏற்பட்டு செய்து, முல்லையை சாப்பிட இட்லி வைக்க சொல்றான்..ரெண்டு பேரும் சாப்பிடலாம்...நான் ரெண்டு இட்லியோட எழுந்திருச்சுக்குவேன்...நீ பைய சாப்பிட்டு முல்லை கூட பேசிட்டு வான்னு சொல்றான் ஜீவா.
இந்த பிளானோட ரெண்டு பேரும் உட்காரும்போதே... முல்லை...எனக்கு ரெண்டு இட்லி போதும் பா..கதிருக்கு நிறைய வைன்னு சொல்றான் ஜீவா. சாப்டுண்ணே என்று கதிர் சொல்ல, இல்லைடா.. நாம கடையில் வடை சாப்பிட்டோம்ல அதனால் பசி இல்லைன்னு அப்பட்டமா பொய் சொல்றான். முல்லையும் காதல் பார்வை பார்த்து, புருஷனுக்கு ஆசையா பரிமாற...முல்லை முல்லைன்னு அத்தை கூப்பிடறாங்க. இருங்க.. நான் போயி என்னன்னு கேட்கிறேன்.. நீங்க உங்க புருஷனுக்கு இட்லி வைங்கன்னு சொல்லி மீனா போகிறாள். அப்போதும் அத்தைக்கு முல்லைதான் வேணும் என்று பிடிவாதமாக கூப்பிட, சாப்பிடுங்க.. என்று பிரிய மனம் இன்றி போகிறாள் முல்லை.
பணம் கையாடல் புகார் கூறிய விஷால்: கணக்குகளை சமர்பிக்க தயாராகும் ரம்யா
அப்போதுதான் மீனா கேட்கிறாள்...ஏங்க இந்த ரூமுக்குள்ளே பேசிக்குவாங்களே..அது மாதிரி எல்லாம் உங்களுக்கு பேசிக்கற பழக்கம் இல்லையான்னு கேட்க, கதிர் வெட்கித் தலை குனிகிறான். அப்போது ஜீவா அண்ணனைப் பார்த்து.. எப்படி கடையில வடை சாப்பிட்டியா...ஏண்ணே.. சாப்பிட்டுண்ணே என்று சொல்ல சீனே...வட போச்சே சீனாகியது!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.