கண்ணனுக்கு ஓகே சொன்ன மூர்த்தி: பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிகிறதா?

தற்போது லேட்டஸ்டாக லட்சுமி அம்மாவின் மரணத்தின் போது நடத்தப்பட்ட சடங்குகள், உறவினர்களின் உணர்வுகள் ஆகியன நிஜமாக நடப்பது போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நல்ல டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடர் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி இருந்தாலும் இந்த சீரியலில் புதுசு புதுசாக திருமண வைபோகம், வளைகாப்பு வைபவங்களையும் பெரிய அளவில் எடுத்து சீரியலை பிரபலப்படுத்தினர். அதுவும் ஒவ்வொரு பங்ஷனுக்கும் பல விஜய் டிவி செலிபிரிட்டிஸ் வந்து பங்ஷனை சிறப்பித்தனர்.

தற்போது லேட்டஸ்டாக லட்சுமி அம்மாவின் மரணத்தின் போது நடத்தப்பட்ட சடங்குகள், உறவினர்களின் உணர்வுகள் ஆகியன நிஜமாக நடப்பது போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. குறிப்பாக கண்ணன் கேரக்டரில் நடிக்கும் சரவணன் விக்ரமின் தத்ரூபமான நடிப்பு, பாராட்டுக்களை அள்ளிக் குவித்தது. சோகமாக சென்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த தொடர்.

சமீபத்தில் வெளியான ப்ரொமோவில், தனத்தின் கனவில் வரும் லட்சுமி அம்மா, நான் எங்கும் செல்லவில்லை. இங்கு தான் இருக்கிறேன். யாரையும் அழுக விடாமல் பார்த்துக் கொள் என ஆறுதல் கூறுகிறார். இதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி, அனைவரையும் தேற்றுகிறாள் தனம். இதற்கிடையில் கண்ணனுக்கும் சாப்பாடு கொடுத்து விடுகிறாள். இதை கவனித்து கேட்கும் மூர்த்தியிடம், கண்ணன் என்னுடைய மகன். அவன் சாப்பிடாமல் இருப்பதை என்னால் தாங்க முடியாது என்கிறாள் தனம்.

இதைத் தொடர்ந்து வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோவில், முல்லையின் அப்பா, தனத்திடம், குழந்தை பிறப்பதற்கு முன் குல தெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வைக்க வேண்டும் என சொல்கிறார். இதை மூர்த்தியிடம் சொல்லும் தனம், குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க வேண்டும். கண்ணனையும், ஐஸ்வர்யாவையும் கூப்பிடவா என கேட்கிறாள். அதற்கு மூர்த்தியும் ஓகே சொல்கிறார். மூர்த்தியின் இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் ஒன்று சேர போகிறதோ என ரசிகர்களிடம் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சோக காட்சிகளை பார்த்து போர் அடித்து போன ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோ உற்சாகத்தை தந்துள்ளது.

அதே சமயம் இந்த ப்ரோமோவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போகிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. சீரியல் முடிய போகிறதா அல்லது புதிதாக வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்து, சீரியலை இன்னும் இழுப்பார்களா என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial pandian stores moorthy accept kannan aishwarya

Next Story
விஜய் டிவிக்கு திரும்பும் வைரல் நடிகை: எந்த சீரியல்னு சொல்லுங்கப்பா!Vijay Tv Actress Sharanya Turadi come back in Serial Viral Photo Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X