புதிய மைல்கல்லை எட்டிய தேன்மொழி சீரியல் நடிகை : ரசிகர்கள் வாழ்த்து மழை

Thenmozhi Jacquline : தேன்மொழி சீரியல் நடிகை ஜாக்குலின் சமூகவலைதளங்களில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Serial Actress Jacquline : சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்கே சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் கூறி கலந்துரையாடி வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்றுவரும் நடிகைகளில் ஒருவர் ஜாக்குலின்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் தற்போது தேன்மொழி பிஏ சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சீரியல்  நடிகை ஆனபின் நிகழ்ச்சி தொகுப்பாளினி பணியை கைவிட்டார். இந்நிலையில், எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜாக்குலின் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் தனது தோழி ஒருவரது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலர் நக்கலாக கமெண்ட் கொடுத்ததும், அதற்கு ஜாக்குலின் பதிலடி கொடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஜாக்குலின் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாளோயர்ஸ் (followers) என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கிறார். அதனை அவர் கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதில் “Thank u all my 1 million Instagram friends and family ❤️❤️… love you all” என ஜாக்குலின் குறிப்பிட்டு உள்ளார்.

ஜாக்குலின் இப்படி ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை கடந்த இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv serial thenmozhi jacquline new mailstone in instagram

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com