Advertisment

'பசிக்குப் பிறந்த பிரியங்கா... பாசத்திற்கு உன்னை அடிச்சிக்க ஆளில்லை!'

vijaytv vj priyanka: விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா மதர்ஸ் டே கொண்டாடிய வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
May 17, 2021 19:49 IST
New Update
vj priyanka

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஆன்கர் பிரியங்காதான். அந்த அளவுக்கு ரசிகர்களை எண்டர்டெயின் பண்ணுவார். அவர் தொகுத்து வழங்கும் ஷோக்களும் பயங்கர ஹிட்தான். சிறந்த ஆன்கருக்கான விருதையும் சில மாதங்களுக்கு முன் வென்றார். பிரியங்கா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.அதில் அவ்வபோது தனது ரெகுலர் லைஃப் அட்ராசிட்டிஸை வீடியோவாக பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகிறார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலும் அதையும் வீடியோவாக போட்டு நம்பர் 1 ட்ரெண்டாக்கினார். இவரது தில்லான கேரக்டருக்கே எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். எதையுமே பாசிட்டிவாக எடுத்துக்கொள்வார்.

Advertisment

தற்போது மதர்ஸ் டே கொண்டாடிய வீடியோவை தனது யூடியூப்பில் பதிவிட்டு உள்ளார். லேட்டாக விஷ் பன்னாலும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. முக்கிய காரணம் அவர் செய்த அலப்பறைகள் தான். மதர்ஸ் டே ஸ்பெஷலுக்கு அவர் செய்தது ஈட்டிங்தான். அவரது அம்மாவுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க வீட்டில் பிரியாணி செய்கிறார்கள். நம்ம பிரியங்கா பற்றிதான் தெரியுமே…நமக்கு சோறுதான் முக்கியம் என்கிற கேட்டகிரி தான். பிரியங்காவை கிச்சனுக்குள் அனுமதிக்கவில்லை. அதனால் ஹாலில் உட்கார்ந்து வேலைவாங்கி கொண்டிருக்கிறார். கிச்சனுக்குள்ள போகக்கூடாதுனா தண்ணீர் வேணும் என அட்டகாசம் செய்கிறார். பிறகு சாப்பாடு ரெடியானதும் வெஜ் ப்ரைட் ரைஸ், பன்னீர் டிக்கி பகோடா, பிரியாணி என ஒரு கை பார்க்கிறார்.

சாப்டாச்சு பிறகென்ன வாக்கிங்தான் மொமெண்ட். 'கோ கொரோனா கோ கொரோனா' என கூறியபடி வாகிங், பிறகு சைக்கிளிங், இப்படியாக பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் முடிந்தது. இந்த வீடியோ தற்போது டிரெண்டிங்கில் உள்ளது ." பசிக்கு பிறந்த பிரியங்கா பாசத்துக்கு உன்ன அடிக்சுக்க ஆளில்லை" என அவரின் வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Vj Priyanka #Vijaytv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment