/tamil-ie/media/media_files/uploads/2021/04/vanitha.png)
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவிற்கு தனி ரகிர்கள் பட்டாளமே உள்ளது. மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போதும் அடுத்த சீசன் எப்போது தொடங்கப்படும் என அதன் ரசிகர்கள் ஆவலாக காத்து கிடக்கின்றனர். ஷோ ஹிட்டானதை விட அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்ல ரீச் கிடைத்தது. முதல் சீசன் ஓவியா தொடங்கி கடந்த சீசன் ஆரி வரை அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் கிடைத்துள்ளது. இதில் கலந்துகொண்ட பின் பலருக்கு படவாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின. பிக் பாஸில் கலந்துகொண்டாலே புகழ் பெற்றுவிடலாம் என ஏராளமான பிரபலங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் என்ற பெயரில் பல பிக் பாஸ் பிரபலங்களை ஒன்றிணைத்து புது ஷோ விஜய் டிவியில் தொடங்க உள்ளது. அதில் குக்வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் புகழ் வனிதா, சாண்டி மாஸ்டர், தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோவில், சோம் - ஷிவானி, ஆஜித் - கேபி, வனிதா - சம்யுக்தா - ஷாரிக், தாடி பாலாஜி - நிஷா ஆகியோர் ஜோடிகளாக பங்கேற்க உள்ளதாக அந்த வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. மேலும் சென்ராயன், மோகன் வைத்யா உள்ளிட்டவர்களும் அந்த ப்ரொமோவில் இடம் பெற்று இருக்கின்றனர்.
இந்தா வந்துருச்சுல இன்னொரு Mass Show 🔥 #BB ஜோடிகள் - மே 2 முதல் இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal#BiggBossJodigal#VijayTelevisionpic.twitter.com/cpBKnhDsjf
— Vijay Television (@vijaytelevision) April 25, 2021
இவர்கள் ஜோடிகள் இல்லை judges எனவும் ப்ரொமோவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால் யார் போட்டியாளர்களாக வருவார்கள், ஷோ எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிர்களிடையே ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us