திறமைக்கு எப்பவும் மதிப்புதான்: விஜய் டிவி சீரியலில் மாஸ் என்ட்ரி ஆகும் மூக்குத்தி முருகன்

vijaytv serial news: ஈரமான ரோஜாவே சீரியலில் தான் மூக்குத்தி முருகன் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்துள்ளார்

mookuthi murugan wife super singer mookuthi murugan

விஜய் டிவியில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த ஷோவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலருக்கு திரைத்துறையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பலருக்கு இதன்மூலம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் மூக்குத்தி முருகன். சூப்பர் சிங்கர் சீசன் 7 இறுதிச்சுற்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் முதல் பாடலாக மூக்குத்தி முருகன் ‘எங்கே நிம்மதி’ பாடலையும், இரண்டாவதாக பில்லா படத்தில் ‘வெத்தலையை போட்டேண்டி’ என்ற பாடலையும் பாடி அரங்கையே அதிர வைத்தார்.மேலும், இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கரின் டைட்டில் வின்னர் ஆக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டார். வின்னர் அனிருத் இசையில் பாட வாய்ப்பும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசாக அறிவிக்கப்பட்டது.

தற்போது மூக்குத்தி முருகன் விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஈரமான ரோஜாவே சீரியலில் தான் மூக்குத்தி முருகன் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்த தொடரில் மலரின் வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பல்வேறு தொடர் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மூக்குத்தி முருகனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல் பாடுவது போன்று ப்ரோமோ வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv super singer winner mookuthi murugan acts eeramaana rojaave serial

Next Story
பிக் பாஸ் கேபி-க்கு கொரோனா: ‘குரூப் டான்ஸ்லாம் பண்ணுனீங்களே..!’
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com