/tamil-ie/media/media_files/uploads/2021/06/hHvIg1PHGwE-HD.jpg)
தன்னுடைய திறமையால் VJவாக விஜய்டிவியில் என்ட்ர் ஆகி தற்போது சீரியலில் கலக்கி வருபவர் ஜாக்லின் பெர்னாண்டஸ். தொகுப்பாளினியாக விஜய்டிவியில் நுழைந்த இவர், கலக்கப்போவது யாரு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஜாக்குலின் எதார்த்தமான குணம் யார் எவ்வளவு கலாய்த்தாலும் சிரித்த முகத்துடன் எடுத்துக்கொள்வார். இது அவரின் ஸ்பெஷாலிட்டி. தொகுப்பாளினியாக பிரபலமானதை தொடர்ந்து தேன்மொழி B.A. என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வெள்ளிதிரையிலும் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/jacequlein.png)
ஜாக்குலின் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அவ்வபோது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிசியாக இருந்த ஜாக்குலின் கொரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக ஊருக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவித்துள்ளதால் சொந்த ஊருக்கு தனது அம்மா மற்றும் தம்பியை பார்க்க சென்றுள்ளார். இந்த பயணத்தை வீடியோக எடுத்து 'My Home Tour' என தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/jacquelin.png)
உண்மையில் பிரபலங்கள் பதிவிடும் Fridge Tour, Home Tour வீடியோக்களை விட ஜாக்குலின் வீடியோவுக்கு ரசிகர்களிடைய நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. சென்னையிலிருந்து கிளம்பி ஸ்ரீபெரும்பத்தூருக்கு காரில் செல்லும் ஜாக்குலின் வீட்டிற்கு தேவையான பொருட்கள், ஸ்நாக்ஸ் அனைத்தையும் வாங்கி செல்கிறார். அவர் 6ஆம் வகுப்பு படிக்கும்போது கட்டிய வீடாம். என்னோடு வா வீடு வரைக்கும்.. என் வீட்டை பார் என்னை பிடிக்கும் என ஆரம்பிக்கிறது விஜய்டிவி ஜாக்குலின் ஹோம் டூர். அன்பான அம்மா, அமைதியான தம்பி, ஆசையாக வாங்கிய வெங்காய பிரிட்ஜ், ஜாக்குலின் ரூம், பழமையான பல்லாங்குழி, விகடனில் வாங்கிய அவார்டு, எல்கேஜியில் வாங்கிய சோப்பு டப்பா என சைல்டுஹுட் மெமரிஸ் வரை பகிர்ந்துகொள்கிறார்.
ஜாக்குலினின் இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் nice family, real home tour, fridge tour, உங்க சோப்பு டப்பா எவ்ளோ? எனக்கு வேணும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.