ஆஸ்பத்திரியிலும் இப்படி பண்றிங்களேமா… இதெல்லாம் பிரியங்காவின் வேற லெவல் கெத்து!..

vj priyanka hospitalized: மருத்துவமனையில் முடியாமல் இருக்கும் போதும் மக்களை சந்தோஷப்படுத்த நினைக்கும் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என வாழ்த்தும் ரசிகர்கள்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக உள்ள பிரியங்கா சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஏராளமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருந்து வந்தாலும், தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் பிரியங்கா. தனது அயராத முயற்சியாலும், நகைச்சுவை திறமையாலும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்.விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழாவில் அவருக்கு சிறந்த தொகுப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது. இவர் நேற்று முன்தினம் தனது யூடியூப் சேனலில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும் அதில் கூறி இருந்தார். கொரோனா நெகடிவ் என வந்திருகிறது, இருப்பினும் வயிற்றுபோக்கிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறி part 1 வீடியோ என வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது யூடியூப் டெட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்திலும் மக்களுக்காக வீடியோ வெளியிட்டதையும் பாராட்டி வருகின்றனர்.

“மருத்துவமனையில் முடியாமல் இருக்கும் போதும் மக்களை சந்தோஷப்படுத்த நினைக்கும் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்”

“நீங்கள் ஒரு IRON LADY சீக்கரமாக குணமாகி வருவீர்கள் ” “பிரியங்காவின் மன தைரியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு..எவனுக்காச்சும் தில் இருக்கா.. இப்படி ஒரு vlog பண்ண”

“நீங்கதான் எங்க stress buster சீக்கரம் வாங்க”

“எல்லோரும் உடல்நிலை சரியில்லன சோகமான மியூசிக்ல வீடியோ போடுவாங்க நீங்க மட்டும் தான் positivity and happiness spread பன்றீங்க சீக்கரமா மீண்டு வருவிங்க இது நிறைய பேருக்கு motivate ஆக அமையும்” என ஏராளமான பிரியங்கா ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொகுப்பாளர் பிரியங்கா குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்த வீடியோவாக பதிவிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv vj priyanka hospitalized youtube video trending no 1 fans comments

Next Story
Tamil Serial Today: ராதிகா தொடர்பு… குழந்தையால் சிக்கும் கோபி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express