Advertisment

கெமிஸ்ட்ரி இருக்கு ஆனால் அவர் வேறொருவரின் மனைவி: ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது பற்றி விக்ரம் ஓபன் டாக்!

ஐஸ்வர்யா ராயுடன் நட்பு இருக்கிறது. அதே சமயம் அபிஷேக் பச்சனுடன் சிறந்த சிறந்த நட்பு இருப்பதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vikram Aishwarya Rai

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்த நிலையில், இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சரியாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து சமீபத்திய நேர்காணலில், நடிகர் விக்ரம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisment

Read In English: Vikram decodes chemistry with Aishwarya Rai, says she’s always been ‘somebody else’s wife’ in their films: ‘Abhishek is a very close friend’

நடிப்புக்காக தன்னை எந்த எல்லைக்கும் சென்று மாற்றிக்கொள்ளும் ஆர்வம் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்கலான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இது குறித்து தற்போது வலைதளங்களில் நேர்காணல்களில் பேசி வரும் விக்ரம், நடிகை ஐஸ்வர்யா ராயுடனான நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சித்தார்த் கண்ணனுடன் யூடியூப் சேனலில் பேசிய விக்ரம் “அபிஷேக் (ஐஸ்வர்யா ராய் கணவர்)எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், அதனால் தானாகவே, குடும்பமும் நண்பர்களாக இருக்கிறோம். விஷயம் என்னவென்றால், ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் திரையில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது, அது ராவணனாக இருந்தாலும் சரி, பொன்னியின் செல்வனாக இருந்தாலும் சரி. அதேபோல் இருவரும் காதலாக இருந்தாலும், இரண்டு படங்களிலும் அவர்  வேறொருவரின் மனைவியாக இருந்துள்ளார். அந்த இரண்டிலும் நான் கொல்லப்படுகிறேன்.

ரசிகர்களுக்காகவே மணிரத்னம் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தில் மகிழ்ச்சியான க்ளைமேக்ஸை கொடுக்க வேண்டும். நான் மணி சார்கிட்ட சொன்னேன், ‘தயவுசெய்து ஒரு படம், ரசிகர்களுக்காகவாவது ஒன்று சேருவோம். அவர் ஒரு அற்புதமான நடிகை. அவர் மிகவும் உறுதியானவர், பரிபூரணவாதி மற்றும் நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள். அபிஷேக் மிக மிக நெருங்கிய நண்பரைப் போன்றவர் என்று கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் எந்தப் படத்திலும் நடிக்காத நிலையில, அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கூட இன்னும் வெளியாகவில்லை. விக்ரம் சமீபத்தில் தமிழில் தங்கலான் படத்தில் நடித்தார். இந்த படத்தின் இந்தி வெர்ஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது, ஐஸ்வர்யா ராயுடனான ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பற்றி பேசிய விக்ரம், “இது மிகவும் சுவாரஸ்யமானது, ஏனென்றால் ராவணன் படத்தில், நாங்கள் ஒருவருக்கொருவராக இருக்க முடியாது.

பொன்னியின் செல்வன் 1-ல் கூட, நான் ஒரு காட்சியில் மட்டுமே அவருடன் இருந்தேன். மீண்டும் இரண்டாம் பாகத்தில், எத்தனை காட்சிகளில் ஒன்றாக இருந்தோம் என்று தெரியவில்லை.  இருவருக்குமிடையிலான காதலும் காதலும் (கதாபாத்திரங்கள்) ரசிகர்கள் அவர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு வலுவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் மீண்டும் ராவணனிடம் செல்கிறார்கள். ஆனால் ராவணன் படத்தில் கூட, நாங்கள் ஒன்று சேரவில்லை, அது ரசிகர்களுக்கு மேலும் சாதகமாகச் செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார் விக்ரம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Vikram Aishwarya Rai Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment