/indian-express-tamil/media/media_files/aZYzJADvJNjzcst7W1MQ.jpg)
தமிழ் மற்றும் இந்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய வித்தியாசம் இருப்பதால், ஒரு சில படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவதை விட இந்தியில் பெரிய வெற்றியை பெறுகிறது என்று நடிகர் விக்ரம் மனம் தறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் விக்ரம், இந்தியிலும் படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் இந்தி மற்றும் தமிழில ஒரே நேரத்தில் வெளியான ராவணன் படத்தில், தமிழில், ராணவன் கேரக்டரிலும், இந்தியில் ராமன் கேரக்டரிலுதம் விக்ரம் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதனிடையே சமீபத்தில் ரன்வீர் அலகபாடியாவின் போட்காஸ்டில் பங்கேற்ற விக்ரம், விது வினோத் சோப்ராவின் 12ம் வகுப்பு ஃபெயில் மற்றும் கிரண் ராவின் லாபாதா லேடீஸ் ஆகிய 2 சிறு பட்ஜெட் படங்கள் இந்தி பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. “நான் அந்தப் படத்தை பார்த்து வியந்து, விது வினோத் சோப்ராவை அழைத்து வாழ்த்துக்கள் சொன்னேன். அதேபோல். நான் நேசித்த தொடரான ஜம்தாராவில் இருந்த லாபதா லேடீஸ் மற்றும் அதில் உள்ள பையனை (ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா) எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதே பிரச்சனை என்னவென்றால், அப்படிப்பட்ட படங்களில் நான் நடிக்க முடியாது. திரையுலகில் மொத்த மாக்கெட்டும், ஒரு டாஸில் செல்கிறது. நான் ஒரு நட்சத்திரம் என்பதால், நான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும் அது மிகப்பெரியதாக மாறும், எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும். இதற்கு பிஜோய் நம்பியாரின் டேவிட் என்ற படம் இந்தி-தமிழ் என இருமொழி ஆந்தாலஜி திரில்லர் படத்தை உதாரணமாக சொல்லலாம்.
இந்த படத்தின் விக்ரம் நடித்த கேரக்டரை ரசிகர்கள் யாரும் பாராட்டவில்லை. விக்ரம்க்கு இந்த கேரக்டர் பிடித்திருந்ததால், அந்த கேரக்டரில் நடித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் நீல் நிதின் முகேஷ் நடித்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்று பிஜாய் விரும்பினார், ஆனால் நான் இந்த கேரக்டரை தேர்வு செய்து நடித்தேன். இது ஒரு நாடக நடிகரின் கேரக்டர், நான் அதை நடித்தேன்.
பின்னர் இந்த படம் தமிழில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தின் முதல் ஷாட்டில், நான் ஒரு பெண்ணை அறைவேன், என் அம்மா என்னை அறைவார், நான் அவரை உதைப்பேன், அடிப்பேன்; எனது சிறந்த நண்பர் ஒரு பெண்ணை நேசிப்பார், நான் பார்த்து உடனடியாக அந்த பெண்ணை காதலிக்கிறேன், பின்னர் அந்த பெண்ணை அடைவதற்காக அந்த பையனைக் கொல்ல நினைக்கிறேன். இந்த கேரக்டர் இந்தியில் மிகவும் வேடிக்கையாக இருக்கும்.
இந்த படம் தமிழில் வெளியானபோது வினோதமான விஷயங்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘என்ன ஆச்சு, எப்படி உங்களால் அதைச் செய்ய முடிந்தது?’ என்று தமிழில் (சினிமா), நீங்கள் பையனுக்காக நிற்பீர்கள், உங்கள் உயிரைக் கொடுப்பீர்கள். ஆனால் இப்படி ஏன் நடித்தீர்கள் என்ற விமர்சனம் எழுந்தது. இந்தி மற்றும் தமிழ் இரண்டும் வெவ்வேறு மார்க்கெட் என்பதை புரிந்துகொள்வது முக்கியம், இரண்டையும் முயற்சி செய்து ஒரு ஒரே திரைக்கதையில் ஒரே கேரக்டரில் நடிக்க முடியாது.
இந்த மாதிரியாக கேரக்டரை பண்ண முடியாத சமயத்தில், மார்க்கெட் சரிவை நோக்கிச் செல்கிறது. நான் நடிக்க தொடங்கிய புதிதில் இந்த மாதிரியான கேரக்டரில் நடித்திருக்கிறேன். அதன்பிறகு மற்ற படங்களில் நடிக்க தொடங்கி இப்போது இந்த நிலையில் இருக்கிறேன் என்று விக்ரம் கூறியுள்ளார். விக்ரம் கடைசியாக தமிழ் ஆக்ஷன் அட்வெஞ்சர் படமான தங்கலன் படத்தில் நடித்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஐந்து வேடங்களில் நடித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.