Kadaram Kondan Day 1 Box Office Collection: இயக்குநர் ஹரியின் ‘சாமி 2’ படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.
ஷங்கரின் ‘ஐ’ படத்திற்குப் பிறகு பெரியளவில் ஓபனிங் இல்லாத குறையை இப்படம் தீர்த்து வைத்திருக்கிறது. கடாரம் கொண்டான் படத்தை இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகர் கமலை வைத்து ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியிருந்தார்.
முதலில் கடாரம் கொண்டான் படத்தில் கமல் தான் நடிக்கவிருந்தார். ஆனால், அரசியல் வேலைகள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் கமல் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், இந்த வாய்ப்பு விக்ரமுக்கு சென்றது. இந்தப் படத்தை தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கமலே தயாரித்திருக்கிறார். கமல் ஹாசன் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வந்த ராஜ் கமல் நிறுவனம், முதன் முதலில் வேறொரு நடிகரை வைத்துத் தயாரித்தப் படம் இது தான். அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமான கடாரம் கொண்டானுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
த்ரில்லர் படமான இதில் கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசான், நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஜிப்ரன்.
கடந்த வெள்ளிக் கிழமை வெளியான இப்படம் முதல் 3 நாளில் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 1.73 கோடி வசூலித்துள்ளது. அதோடு தமிழகம் முழுக்க 9 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். தவிர, கடாரம் கொண்டான் உலகளவில் ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.50 கோடி வரை வசூல் குவித்துள்ளது என்கிறார்கள். இன்னும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதால், இன்னும் படத்தின் வசூல் உயரும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.
அதோடு, நேற்று மட்டும் சென்னையில் ரூ. 16 லட்சம் வசூலித்துள்ளது. ஆகையால் மொத்தமாக சென்னையின் 4 நாள் வசூல் ரூ. 1.73 கோடி.
July 19th - 21st #Chennai City BO - Top 5:
2. #TheLionKing
3. #Aadai
4. #Gurkha
5. #Super30
— Ramesh Bala (@rameshlaus) 22 July 2019
இதற்கு முன் வெளியான விக்ரமின் படங்களான, ஸ்கெட்ச் மற்றும் சாமி 2 ஆகியப் படங்கள் குறைந்த வசூலை ஈட்டின. ஆகையால், வெகுநாட்கள் கழித்து கடாரம் கொண்டான் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்திருக்கிறார் விக்ரம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.