Actor Vikram in Kadaram Kondan: நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் கடாரம் கொண்டான். ராஜேஷ் செல்வா இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படம்.
ஜாம்பவான் இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்ட பெருமைக்குரியவர் விக்ரம்! இடையில் மிகவும் தொய்வடைந்து டப்பிங் கலைஞராக பணியாற்றிக் கொண்டிருந்த அவர், பாலாவின் அதிரடி ஹிட் சேதுவால் ஹைஜம்பாக எகிறினார்.
அன்றைய கமல், விஜயகாந்த் மார்க்கெட்டை தாண்டி இரண்டாம் இடத்திற்கு வந்தார். அப்போதே 20 படங்களுக்கு மேல் நடித்திருந்த விஜய், அஜித் உட்பட பலரும் விக்ரமின் வெற்றியால் சற்றே நிலை குலைந்தனர். சேது, தில், தூள், காசி, பிதாமகன் மற்றும் கமர்ஷியல் மாஸ் ஹிட்டான ஜெமினி, சாமி வெற்றியை அன்றைய பல ஹீரோக்களால் தொடவே முடியவில்லை.
நடிகர் கமல்ஹாசன் கேரக்டருக்காக தன்னை உருமாற்றிக்கொள்பவர் என பெயர் பெற்றிருந்தார். ஆனாலும் அவரால் வசூல்ரீதியாக தொடர் வெற்றிகளை பெறமுடியாத காலத்தில் விக்ரம் புயல் போல் வந்ததும், வந்தவேகத்தில் மாஸ் ப்ளஸ் ஆக்டிங் ஸ்பேஸில் இறங்கி அடித்ததும் சாதாரண விஷயமல்ல.
இவரது வருகையால் முன்னணி கதாநாயகர்கள் பலர் சறுக்கினர். அதில் கமல்ஹாசனும் ஒருவர். கமல்ஹாசன், விக்ரம் ஆகிய இருவரும் பரமக்குடி காரர்கள் என்றாலும், இந்த போட்டி காரணமாக இருவருக்குள்ளும் ஒரு நிழல் யுத்தம் நடந்து வந்ததாக தகவல்கள் உண்டு.
பின்பு அந்நியன் படத்திற்காக விக்ரம் கொடுத்த 2 வருடம் இடைவெளியும், அதே நேரத்தில் அப்படம் பெரிய வசூல் வெற்றியை பெறாமல் போனதும் விக்ரமுக்கு பின்னடைவு. அதை அவரால் சரிசெய்யமுடியவில்லை. அதை தொடர்ந்து அவர் முதல்நிலை கதாநாயகர்கள் பட்டியலில் இல்லாமலிருந்தாலும் கமெர்ஷியல் ஹீரோக்கள் பட்டியலில் இருக்கிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சமீபகாலமாக தொடர்ந்து படம் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் விக்ரமுடன் கமல் மகள் ஸ்ருதி ஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து கடாரம் கொண்டானை தயாரிக்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ். கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தை இயக்கிய கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் செல்வா படத்தை இயக்குகிறார்.
அரசியலைப்போல் சினிமாவிலும் நிரந்த பகைவர்கள் இல்லை என்னும் கூற்றை நிரூபித்துள்ளது கடாரம் கொண்டான்.
திராவிட ஜீவா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.