/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aishwarya-Rai-Bachchan.jpg)
பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் படித்தவர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லால் 3 நாட்களில் இந்த படம் ரூ 200 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் இருக்கும் படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன் ரசிகர்களுக்கு தனது தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தியேட்டரில் இருந்து வெளியாகியுள்ள வீடியோ பதிவில், நடிகர் விக்ரம், மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறார்.
அப்போது நடிகர் விக்ரம் ஐஸ்வர்யாவை ரசிகர்களை நோக்கி அழைத்துச் செல்கிறார். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை நோக்கி கைகளை அசைத்து, ஆரவாரம் செய்த ஐஸ்வர்யா கையில் முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்து காரில் செல்கிறார்.
தொடர்ந்து வெளியாகியுள்ள மற்றொரு பகுதி வீடியோவில், த்ரிஷா, மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் தியேட்டரை விட்டு வெளியேறுகிறார், அவரை பார்க்க ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் குவிகின்றனர். முன்னதாக, கார்த்தி இது போன்ற ஒரு காட்சியை வடிவமைத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி என்று ஒரு உணர்ச்சிகரமான குறிப்பை வெளியிட்டிருந்தார்.
வெளியான 3 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் பம்பர் ஓப்பனிங் பெற்றுள்ள பொன்னியின் செல்வன், உள்நாட்டில் ரூ.100 கோடி கிளப்பை நோக்கி முன்னேறி வருகிறது, தற்போதுவரை படம் ரூ.69 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண்டிகை காலங்களில் இந்த வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோழ சாம்ராஜ்யங்களில் நடக்கும் உண்மை மற்றும் கற்பனை கலந்த கதையாக பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராணி நந்தினி வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவி முதலாம் ராஜராஜ சோழனாகவும், கார்த்தி வாணர்குலத்தின் போர் இளவரசனாக வந்தியத்தேவனாகவும் நடித்துள்ளனர். .
தற்போது இப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் பாகம் 2023-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பாகங்களும் 150 நாட்களில் படமாக்கப்பட்டது. பாகுபலி படங்களின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களை ஒப்பிடும்போது பொன்னியின் செல்வன் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் 1 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய மணிரத்னம், பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசியபோது “பாகுபலி மாதிரி இருக்குமா என்று சுபாஷகரன் (பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்) என்னிடம் கேட்டார். இல்லை அப்படி இருக்காது என்றேன். பின்னர் பத்மாவத் போல இருக்குமா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். பிறகு எப்படி இருக்கும் என்று கேட்டார். அமரர் கல்கி எழுதியதைப் போல் உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.