தங்கலான் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒகேனக்கல் அருவியில் படக்குழுவினர் ஆட்டம்போட்ட வீடியோவை விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பாத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே விக்ரம் அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பசுபதி, பார்வதி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: பிபா உலகக் கோப்பை வரை சென்ற துணிவு… ப்ரமோஷனில் அஜித் ரசிகர்கள் தீவிரம்
கோலார் தங்க வயலில் நடந்த வரலாற்றை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். பான் இந்தியா படமாக வெளியாக உள்ள தங்கலான் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விக்ரம் நீளமான முடி, அடர்ந்த தாடியும் என வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். படத்தின் ப்ரோமோவில் விக்ரம் தனித்துவமான கெட்-அப்பில் கழுதை மந்தையை மேய்ப்பது போல் இருந்தது.
இதனிடையே ஒகேனக்கல் அருகே படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் அருவியில் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் விக்ரம் தனது பதிவில்,
இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது. பேக்கப் என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil