விக்ரம் பிரபுவால் அஜித்துக்கு சிக்கல்?

விவேகத்தை ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றி விட்டதாகவும் தகவல் வருகிறது. ஜாஸ் சினிமா வாங்கியிருந்தால் விவேகம் தப்பிக்கும்.

வரிசையாக அடி வாங்குகிறார் விக்ரம்பிரபு. 7 கோடி வரை விற்கப்பட்ட சத்ரியன் அதில் பாதி கூட வசூலிக்கவில்லை. விக்ரம் பிரபுவின் அடுத்தடுத்த படங்கள் பாதியில் நிற்கின்றன. ஃபைனான்ச் கிடைக்காதது தான் காரணம். இந்த அடி விக்ரம் பிரபுவோடு சேர்த்து சத்யஜோதி நிறுவனத்தையும் பாதித்திருக்கிறது.

சத்யஜோதி ஏற்கனவே தொடரி ரிலீஸால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இப்போது சத்ரியனும் சேர்ந்துகொண்டதால் அது அப்படியே விவேகம் ரிலீஸை பாதிக்கலாம் என்கிறார்கள். இரண்டு படங்களின் இழப்பையும் விவேகம் விலையில் பேசி சரிகட்டிக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

விவேகத்தை ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றி விட்டதாகவும் தகவல் வருகிறது. ஜாஸ் சினிமா வாங்கியிருந்தால் விவேகம் தப்பிக்கும். அடுத்த சத்யஜோதி படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விடுவார்கள் வினியோகஸ்தர்கள். ஆனால் வாங்கிய அடிகளைப் பார்த்தால் சத்யஜோதி தொடர்ந்து படங்கள் தயாரிக்குமா என்பதே சந்தேகம் தான்!

×Close
×Close