வெறும் கைகளால் பாம்பை இரண்டு துண்டுகளாக்கும் விக்ரம்; மிரட்டும் தங்கலான் டீசர்

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது தங்கலான் டீசர்; மிரட்டும் விக்ரம் தோற்றம்; எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள்

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது தங்கலான் டீசர்; மிரட்டும் விக்ரம் தோற்றம்; எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள்

author-image
WebDesk
New Update
Thangalaan

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது தங்கலான் டீசர்; மிரட்டும் விக்ரம் தோற்றம்; எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் காட்சிகள்

தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரிக்கும் வகையில், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் சியான் விக்ரம் இந்த படத்திலும், உக்கிரமான போர் காட்சிகளை சித்தரிக்கும் டீசர் மூலம் ஈர்க்கிறார்.

Advertisment

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் தங்கலான். படத்தில் விக்ரம் தவிர, பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கோல்ட்ராகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் பணிகளை கவனிக்க எடிட்டிங் பொறுப்புகளை ஆர்.கே. செல்வா ஏற்றுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 118 நாட்களில் நிறைவடைந்துள்ளது, மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டதால், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தநிலையில், தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. விக்ரம் ஒரு பாம்பை வெறும் கைகளால் முறுக்கி இரண்டு துண்டுகளாகப் பிரித்து அதைக் கொல்வதாக டீஸர் தொடங்குகிறது. இரத்தம் தெறிக்கும் காட்சிகள், சைரன்கள் கத்துவது மற்றும் மக்கள் படுகொலை செய்யப்படுவது போன்ற கொடூரமான காட்சிகள் டீஸர் முழுவதும் நிறைந்திருக்கிறது.

மேலும், விக்ரமின் வித்தியாசமான தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும், போர் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pa Ranjith Vikram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: