/tamil-ie/media/media_files/uploads/2020/04/chemban-vinod-jose-second-marriage.jpg)
chemban vinod jose second marriage
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கி தயாரித்த 'கோலி சோடா 2' திரைப்படத்தில், நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் பயங்கர வில்லனாக நடித்திருந்தார். தனது மிரட்டும் நடிப்பால் மிகவும் பாராட்டப்பட்டார். அதற்கு முன்பே அவர் 'நாயக்கன்', 'ஈ.மா.யாவ்' உள்ளிட்ட பல மலையாள படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இதற்காக அவர் 2018-ல் IFFK சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
சார்ஜ் போட்டுக் கொண்டு வீடியோ கால்: மொபைல் வெடித்து இளம் பெண் காயம்
செவ்வாயன்று, செம்பன் வினோத் ஒரு எளிய விழாவில் மரியம் தாமஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இந்த செய்தியை நடிகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மரியம் தாமஸ் கோட்டயத்தை பூர்வீகமாகக் கொண்ட, உளவியலாளர். இது செம்பன் வினோத்துக்கு இரண்டாவது திருமணம். அவர் சமீபத்தில் தனது முதல் மனைவி சுனிதாவுடனான திருமணத்தை சட்டபூர்வமாக முறித்துக் கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். அம்மா சுனிதாவுடன் அமெரிக்காவில் இருக்கிறார் வினோத்தின் மகன்.
View this post on InstagramJUST MARRIED ????????????????.
A post shared by Chemban Vinod Jose (@chembanvinod) on
-
நாட்டிலேயே தமிழகத்தில் தான் இரண்டு மடங்கு கூடுதல் கொரோனா சோதனைகள் – சென்னை மாநகராட்சி
சமீபத்தில் வெளிவந்த ’ட்ரான்ஸ்’ என்ற படத்தில் கவுதம் மேனன் உடன் இணைத்து, வில்லனாக வினோத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.