Advertisment

விமல், ஓவியாவின் களவாணி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kalavani 2 release date

இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் ‘களவாணி’.

Advertisment

நடிகர் விமல், நடிகை ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் சூரி, கஞ்சா கருப்பு, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கிராமத்துப் பின்னணியில் காமெடி களத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என அத்தனை பேரும் இதிலும் நடித்துள்ளார்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ’களவாணி 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப்  படம் வரும் 28-ம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

முன்னதாக இந்தப் படத்திற்கு எதிராக எழுந்த பிரச்னைகள் குறித்து சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

Oviya Vimal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment