Advertisment

தமிழில் ரீமேக் ஆகும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்... 2-ம் பாகம் குறித்து முக்கிய தகவல்

ஒரு வழக்கறிஞர் தனது வழக்கில் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை உணர்த்தும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

author-image
WebDesk
New Update
தமிழில் ரீமேக் ஆகும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்... 2-ம் பாகம் குறித்து முக்கிய தகவல்

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்ற பிளாக் காமெடி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மலையாள சினிமாவில் நடிகர் பாடகர், இயக்குனர், பாடல் ஆசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர் வினித் சீனிவாசன். 2008-ம் ஆண்டு வெளியான சைக்கிள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், டிராபிக், ஓம் சாந்தி ஓசானா, லவ் ஆக்ன் ட்ராமா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

2010-ம் ஆண்டு மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வினித் சீனிவாசன், நடப்பு ஆண்டில் வெளியாக ஹரீடியம் வரை 5 படங்களை இயக்கியுள்ளார். மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வரும் வினித் சீனிவாசன், தற்போது அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஒரு வழக்கறிஞர் தனது வழக்கில் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை உணர்த்தும் வகையில் பிளாக் காமெடி படமாக கடந்த 11-ந் தேதி வெளியான முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கேரளாவில் மட்டுமல்லாமல் இந்த படம் தமிழகத்திலும் குறைந்த திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் அதிகமாக ரசிகர்களை சென்றடையவில்லை. இதனிடையே முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக படத்தின் இயக்குனர் அபினவ் சுந்தர் நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மலையாளப் படங்களின் தமிழ் ரீமேக்குகளின் நீண்ட பட்டியலில் சமீபத்தில் மலையாளப் படங்களான விக்ருதி, ஆதி கப்யாரே கூடமணி, ஜோசப், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ஆகிய படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது,  அந்த வரிசையில் தற்போது முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் இணையவுள்ளது.

அதே சமயம் இந்த படத்தில் நடிப்பது யார் உள்ளிட்ட தகவ்லகளை அவர் வெளியிடவில்லை. இதற்கிடையில், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸின் திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராக உள்ளதாக படத்தின் நாயகன் வினித் சீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், எங்கள் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 2024ல்  செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். டார்க் காமெடியின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் உறியடி, குரங்கு பொம்மை, கோதா, வாயை மூடி பேசவும் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த அபினவ் சுந்தர் நாயக், முகுந்த் உன்னி அசோசியேட்ஸ் மூலம் இயக்குனராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Malayalam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment