”உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா... தைரியமா இரு” - ரசிகருக்கு ஆறுதல் சொன்ன ரஜினி

சீக்கிரம் குணம் அடைஞ்சு நீங்க வீட்டுக்கு வந்துருவீங்க. நீங்க குணமடைஞ்சு வந்த பிறகு, ப்ளீஸ், என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க..

சீக்கிரம் குணம் அடைஞ்சு நீங்க வீட்டுக்கு வந்துருவீங்க. நீங்க குணமடைஞ்சு வந்த பிறகு, ப்ளீஸ், என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க..

author-image
WebDesk
New Update
”உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா... தைரியமா இரு” - ரசிகருக்கு ஆறுதல் சொன்ன ரஜினி

Viral audio of Rajinikanth sending voice notes to his fan for his fast recovery : மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் முரளி என்பவர், நடிகர் ரஜினிகாந்தை டேக் செய்து, என்னுடைய கடைசி ஆசை 2021 தேர்தலில் வெற்று பெற்று தமிழக மக்களின் சிறந்த தலைவனாக திகழ வேண்டும் என்றும் கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரமாக உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகின்றேனே என்ற வருத்தம் தான் எனக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

மேலும் படிக்க : மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீடு ; தமிழக அரசுக்கு நன்றி கூறிய சூர்யா…

Advertisment
Advertisements

இதனை அறிந்த ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகருக்கு வாய்ஸ் நோட்ஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ”நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா! தைரியமா இருங்க.. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்... சீக்கிரம் குணம் அடைஞ்சு நீங்க வீட்டுக்கு வந்துருவீங்க. நீங்க குணமடைஞ்சு வந்த பிறகு, ப்ளீஸ், என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க... நான் உங்களை பாக்குறேன்... தைரியமா இருங்க... நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன். தைரியமா இரு கண்ணா... தைரியமா இரு” என்று தன் ரசிகருக்கு ஆறுதல் கூறும் ஆடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: